Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர் சிம்பு – செம்ம மாஸான லேட்டஸ்ட் லுக்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்து வரும் மாநாடு. அரசியல் கதைக்களத்துடன் மிகவும் விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜெ. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் பாரதிராஜா என பலரும் நடித்து வருகிறார்கள்.

கொரோனா காரணமாக நின்று போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் விரைவில் துவங்கவிருக்கிறது. இதுமட்டுமின்றி இயக்குனர் சுசீந்திரனுடன் தனது அடுத்து படத்திற்காக கைகோர்த்துள்ளார் நடிகர் சிம்பு.

இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய நடிகர் சிம்புவின் போட்டோ புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.