நடிகர் சிம்பு தற்போது மாநாடு, மஹா என இரு படங்களிலும் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
கடந்த 2015ம் ஆண்டு சிம்பு நடித்து வெளியான படம் வாலு. இப்படத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை விஜய் சந்தர் இயக்கி இருந்தார்.
தற்போது அவர் மீண்டும் சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
இந்நிலையில் கொரோனா பிரச்னை முடிந்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை துவங்கும் என தெரிவிக்கின்றனர். மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.