சிம்பு இந்த பெயருக்கு பின்னால் பிரச்சனை, சர்ச்சை, படப்பிடிப்புக்கு வர மாட்டார், குண்டாகிவிட்டார் என எத்தனையோ பேச்சுகள் இருந்தன.
அவர்களின் பேச்சுகள் எல்லாமே அவரை மிகவும் காயப்படுத்தியது, ஆனாலும் தனக்கு பிடித்த வேலையை செய்து வந்தார்.
இந்த நேரத்தில் தான் அதுவும் லாக் டவுன் காலத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு 30 கிலோ எடை குறைத்து ஆளே அடையாம் தெரியாமல் ஒல்லியாகிவிட்டார்.
இது நவம்பர் மாதம் இப்போது சிம்பு எப்படி உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
கடந்த நவம்பர் 2019ம் ஆண்டு இருந்த சிம்புவின் புகைப்படத்தையும் இப்போது உள்ள புதிய எஸ்டிஆரின் புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் என்ன ஒரு சேஞ்ச் என பெருமையாக அவரது புகைப்படத்தை டிரண்ட் செய்து வருகின்றனர்.