Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதலர் தினத்தன்று சிம்புவ இப்படி புலம்ப வச்சிட்டாங்களே – வைரலாகும் வீடியோ

Simbu Valentine's Day - viral video

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிம்பு, உடல் எடையை குறைத்த பின் படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அவர் கைவசம் மாநாடு, பத்து தல, கவுதம் மேனனுடன் ஒரு படம், ராம் இயக்கும் படம், சுசீந்திரனுடன் ஒரு படம் என ஏராளமான படங்கள் உள்ளன.

இந்நிலையில், நேற்று காதலர் தினத்தன்று தனது நாய் கோகோவுடன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார் சிம்பு. அதனுடன் அவர் வேடிக்கையாகப் பேசி கொஞ்சி விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “முதல்ல எனக்கு கல்யாணம் நடக்கணும், அப்புறம் தான் உனக்கு. நான் மட்டும் தனியா இருக்கும் போது நீ ஜாலியா இருந்தா அது நியாயம் கிடையாது.

என் கஷ்டம் உனக்கு புரியுதா? தங்கம் என்னமா அப்படி பாக்குற. எனக்கு கல்யாணம் ஆகிடும்னு சொல்ல வர்றியா? ஆகாதுனு சொல்ல வர்றியா?. ஓ ஆகிடும்னு சொல்றியா?” என சிம்பு கேட்க, அதற்கு அந்த நாய் கொடுக்கும் ரியாக்‌ஷன்களும் ரசிக்கும் படியாக உள்ளது.