கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் நடித்த சிம்பு ஆசைப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நேற்று இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ட்ரெய்லர் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.
அது வேறு யாருமில்லை நட்சத்திர வீரரான விராட் கோலி தான். ஏற்கனவே விராட் கோலி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் உங்களுக்கு பிடித்த பாடல் எது? என்று கேட்டபோது அவர் பத்து தல படத்தின் வரும் “நீ சிங்கம் தான்” என்ற பாடலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிம்பு இதுபோல் பேசி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.

Simbu wants to act in a cricketer’s biopic