நீளமான முடியுடன் செம மாஸ் லுக்கில் சிம்பு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக எஸ் டி ஆர் 48 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தின் அப்டேட் காக சிம்பு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
சிம்பு நீளமான முடியுடன் கொண்டை போட்டுக்கொண்டு இந்த படத்திற்காக தயாராகியுள்ள போட்டோக்கள் தான் அவை. இயக்குனர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
Positive Mind Positive Vibes👍🏾#STR48 #BloodandBattle pic.twitter.com/AN5KWM9mHY
— Desingh Periyasamy (@desingh_dp) September 4, 2023