கொரோனா ஊரடங்கில் தனது உடல் எடையை முழுவதுமாகக் குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறிய சிலம்பரசன், சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை சிங்கார வேலன் தயாரிக்கிறார். வானம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி புகழ்பெற்ற ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவக்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக சிலம்பரசன் TR நடிக்கும் புதிய படம்
தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிக்க ஞானகிரி இயக்குகிறார்#SilambarasanTR pic.twitter.com/0UUeKwn5WI
— Diamond Babu (@idiamondbabu) February 2, 2021