அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு எளிய வழிமுறைகளை குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே நெஞ்செரிச்சல் மற்றும் தொண்டை எரிச்சலுக்கு அசிடிட்டி ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இது நம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளையும் கொண்டு வந்து விடும்.
அசிடிட்டி பிரச்சனையை போக்க நாம் சில உணவு முறைகளை பயன்படுத்தலாம்.
முதலில் அசிடிட்டி அதிகமாக இருக்கும்போது உணவிற்கு முன்பு நான்கு ஸ்பூன் கற்றாழை ஜூஸ் சாப்பிட்டதற்கு பின் நான்கு ஸ்பூன் குடிக்க வேண்டும். மேலும் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இரண்டு வேளை ஒரு நாளைக்கு சாப்பிடுவது சிறந்தது.
இது மட்டும் இல்லாமல் துளசி இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் குமட்டல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்க தூங்கும் போது உடலை உயரமாகவும் கால்களை கீழே வைத்த படியும் தூங்கும் போது நாம் சில பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
குறிப்பாக கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிப்பதை தவிர்ப்பது சிறந்தது.