தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக 90-களில் நடித்து வந்த இவர் பேட்ட படத்தின் மூலம் மீண்டும் நாயகி ஆக நடிக்க தொடங்கினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் சிம்ரன் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டபடி இருக்கிறார். இந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய கணவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
