Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

யங் லுக்கில் சிம்ரன்..இணையத்தை கலக்கும் புகைப்படம்

simran in latest photo

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். அஜித் விஜய் சூர்யா கமல் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் திருமணத்திற்குப் பிறகு வாய்ப்பு குறையவே குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார் சிம்ரன் தற்போது மீண்டும் அடுத்த இன்னிங்சை தொடங்கி நடிக்கத் தொடங்கிய நிலையில் பேட்டை படத்திலிருந்து படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவருடைய மகனுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய பையனா சீக்கிரம் ஹீரோவாக நடிப்பார் போல என கூறி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது சிம்ரன் இளமையான வீட்டில் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் குழப்பமடைந்து இது யாரு உங்க பொண்ணா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு சிம்ரன் இளமையாக தோற்றம் அளிக்கிறார். இதோ அந்த போட்டோ