Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாதவனுடன் எடுத்த புகைப்படம் வெளியிட்டு சிம்ரன் போட்ட பதிவு

simran latest update

இஸ்ரோ விஞ்ஞானி நம்பினாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டு இருந்த “ராக்கெட்ரி தி நம்பி எக்ஸ்போர்ட்”படத்தில் மாதவனுக்கு மனைவியாக சிம்ரன் நடித்திருக்கிறார். இந்தப் படம் மக்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இப்படம் குறித்து சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது ‘பார்த்தாலே பரவசம் படத்தில் சிமி மற்றும் மாதவன்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் திரு மற்றும் இந்திரா’ ஆகிய கதாபாத்திரங்களை செய்தது முதல், ‘ராக்கெட்ரி படத்தில் திரு மற்றும் திருமதி நம்பி நாராயணனாக’ நடித்தது வரை எதுவும் மாறவில்லை.

மேடி 20 ஆண்டுகளுக்குப் பிறகு உன் இதயத்தில் உன்னுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீ மிகவும் சிறப்பானவன் என்று இந்த மகிழ்ச்சியான பதிவுடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணைத்து வெளியிட்டுள்ளார். இந்த பதிவுடன் இருக்கக்கூடிய புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.