அருண் விஜய்யின் 30-வது படம் சினம். தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்கி உள்ளார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. இதனால் சினம் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. மேலும் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சினம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அருண் விஜய், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக தயாராகி வருவதாக கூறியுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் குறைந்து தற்போது பாதுகாப்பான சூழ்நிலை மாறி வருவதால், சினம் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க வரும்’ என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விரைவில் ‘சினம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.