தமிழ் சினிமாவில் பிரபல பாடகி சுசித்ரா. இவர் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் நடிகர் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவரது கணவர் சுசித்ராவை விவாகரத்து செய்தார்.
இப்படியான சூழலில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வீடியோ ஒன்றில் சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டவர் என இருந்ததையடுத்து சுசித்ரா அவருக்கு போன் போட்டு போலீசில் புகார் அளிக்கப் போவதாக கூறினார்.
அதன் பிறகு மீண்டும் அவருக்கு போன் போட்டு என்னை பற்றி இப்படி தவறாக பேச உங்களுக்கு தனுஷ் தானே பணம் கொடுத்தார் என கேட்டுள்ளார். மேலும் என்னிடம் ஹன்சிகா, திரிஷா என பல நடிகைகளின் பார்ட்டி வீடியோக்கள் இருக்கின்றன. அவற்றை உங்களுக்கு அனுப்புகிறேன் அவள் பற்றியும் பேசுங்கள் என கூறி அந்த வீடியோக்களையும் அனுப்பியுள்ளார்.
ஆனால் பயில்வான் ரங்கநாதன் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அந்த வீடியோக்களை டெலிட் செய்து விட்டதாக கூறியுள்ளார்.