தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களும் விறுவிறுப்பான கதை களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை விஜயா மீனாவிடம் மன்னிப்பு கேட்கும் வரை பேச மாட்டேன் என்று சொல்லி விட்ட நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது, அண்ணாமலை இரும்பு விஜயா தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்க மறுத்து அவரே டம்ளரில் தண்ணீர் எடுத்து குடிக்கிறார். அதன் பிறகு விஜயா ரூமில் இருப்பதால் அண்ணாமலை சோபாவில் படுக்க விஜயா எனக்கு ரொம்ப குளிருது நான் வெளியில் படுத்துகிறேன் எனக்கு ரூம் வேண்டாம் என்று சொல்ல அண்ணாமலை ரூமுக்குள் சென்று படுக்கிறார்.
மீனா நீங்களும் ரூமுக்குள்ள போய் படுத்துக்கோங்க அத்தை என்று சொல்ல நான் வெளிய படுக்கிறதுனால தான் அவர் ரூமுக்குள்ள போறாரு என்று கோபப்படுகிறார்.
பிறகு ரோகிணி அங்கிள் கிட்ட பேசுங்க என்று சொல்ல விஜயா அவர் வெளியே போறது கூட என்கிட்ட சொல்லிட்டு போக மாட்டுறாரு.. இப்போ எல்லாம் இந்த மகாராணி கிட்ட தானே சொல்லிட்டு போறாரு என்று மீனா கோபப்படுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பர்த்டே பங்க்ஷன் என்று பொய் சொல்லி பிரெண்ட்ஸ்களுடன் பார்ட்டிக்கு வரும் இனியாவை பப்புக்கு கூட்டி வந்து டான்ஸ் ஆட சீனியர்கள் இனியாவை பார்த்து சூப்பராக இருப்பதாக பேசிக் கொள்ள இனியா கிளாஸ்மேட் பசங்களுக்கும் சீனியர்களுக்கும் பிரச்சனை உருவாக போலீஸ் வந்து அனைவரையும் கொத்தாக அழைத்துச் செல்கிறது. ஈஸ்வரியைத் தொடர்ந்து இனியா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். இதனால் பாக்கியா செய்யப்போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர உள்ளது.
