தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதி எங்க அம்மா கூட என்னை கூப்பிட வரல நீங்க தான் முதல்ல வந்து இருக்கீங்க நீங்க ரொம்ப ஸ்வீட் என்று சொல்லி விஜயா பக்கத்தில் போய் உட்காருகிறார்.
இப்போதைக்கு அந்த வீட்டுக்கு வர ஐடியா இல்ல இருந்தாலும் உங்களுக்காக யோசிக்கிறேன் என சுருதி சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய அம்மா வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க ஓடிப்போய் அம்மாவை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். ரவியும் அவர்களை வாங்க என்று அழைக்க விஜயா திகைத்து நிற்கிறார்.
பிறகு விஜயா உங்க பொண்ணு மேல உங்களுக்கு வேணா அக்கறை இல்லாம இருக்கலாம் ஆனா என் பையன் மேல எனக்கு அக்கறை இருக்கு அதனால அது தான் முதல் ஆளாக அவங்களை வீட்டுக்கு கூப்பிட வந்திருக்கேன் என்று சொல்கிறார்.
ரவி எல்லோருக்கும் காபி போட போக பார்வதி உன் பையன் இந்த குடும்பத்துக்கு முழு சமையல்காரனாயிடுவான் போல என்று சொல்ல விஜயா டேய் ரவி நீ வந்து உட்காரு என கூப்பிடுகிறார். ஆனால் ரவி இருங்க மா காபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று சொல்லி காபி போடுகிறார்.
அதனை தொடர்ந்து நீங்க உங்க வீட்டுக்காரரோட வந்து புதிய எங்க வீட்டில விட்டுட்டு போங்க என்று விஜயா சொல்ல உங்க மருமக மீனாவும் எங்க வீட்டுக்கு வந்து பேசினா அவ சொன்னது நியாயமா பட்டுச்சு அதனால் தான் நானும் இங்க வந்திருக்கேன் நான் அவர்கிட்ட பேசி கூட்டிட்டு வரேன் என்று சொல்ல விஜயா மீனா பேசியதாக சொன்னதைக் கேட்டு ஷாக் ஆகிறார்.
அடுத்ததாக முத்துவின் நண்பர்கள் எல்லோரும் மீனா செய்த சாதனைக்காக ட்ரீட்டு கேட்க அந்த நேரம் மீனா மீன் குழம்பு மீன் வருவல் என எல்லாவற்றையும் செய்தி எடுத்துக் கொண்டு செட்டுக்கு வருகிறார். முத்து ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும் என்று சொல்லி மீனா விடம் எந்த இடம் என்று சொல்லாமல் கோவிலுக்கு கூட்டி செல்கிறார். அங்கே ஏற்கனவே சீதாவும் மீனாவின் அம்மாவும் தயாராக இருக்க இங்கு எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க என கேட்கிறார்.
அன்னைக்கு நான் உன்னை தூக்கிட்டு நடந்த மாதிரி நீ என்ன தூக்கிட்டு பத்து முறை கோவிலை சுற்றி வரணும் அப்படின்னு நான் வேண்டுதல் வச்சிருக்கேன் என்று சொல்லி மீனாவை வெறுப்பேற்ற நான் ஒன்னும் பயப்பட மாட்டேன் தூக்கிட்டு நடப்பேன் என்று சொல்லி முத்துவை தூக்க போக வேண்டாம் கீழ போட்டு முதுகு உடையவா என பயப்படுகிறார்.
அதற்கு அடுத்ததாக கோவிலுக்குள் கூட்டிச் சென்று உனக்கு திருஷ்டி எடுக்கணும்னு சொன்னாங்க அதனாலதான் கூட்டிட்டு வந்ததாக முத்து சொல்கிறார். பிறகு மீனா முத்துவையும் கூப்பிட்டு நிற்க வைத்து திருஷ்டி எடுக்க சொல்கிறார். அடுத்து கோவில் பூசாரி உங்க அப்பா எப்பவும் உன்ன பத்தி தான் பேசிட்டு இருப்பார் என சொல்ல மீனாவும் அவரது குடும்பமும் வருத்தப்பட முத்து கவலைப்படாதீங்க அத்தை மாமா எப்பவும் நம்ப கூட தான் இருப்பாரு இங்கே எங்கேயாச்சும் இருந்து நம்மள பாத்துக்கிட்டு தான் இருப்பாரு என ஆறுதல் கூறுகிறார். மீனா காரில் வரும்போது முத்துவுக்கு நன்றி சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
