Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரோகினி சொன்ன வார்த்தை, கோபத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 01-06-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இதை சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து குடும்பத்தை விட்டுட்டு அந்த பொண்ணுக்கு வெளிநாட்டில் என்ன வேலை வேண்டி கிடக்கு ஏன் இங்கே இல்லாத வேலையா என்று கோபப்பட அது எதுக்கு உங்களுக்கு என்று ரோகிணி கேள்வி கேட்க இருவரும் ஷாக்காகின்றனர். பிறகு ரோகினி மத்தவங்க விஷயத்தை கேட்டு என்ன ஆகப்போகுது என்று சொல்கிறார்.

அதன் பிறகு நீங்க கிளம்புங்க உங்களுக்கு வேலை இருக்குல்ல என்று சொன்னதும் மீண்டும் நாங்க தினக்கூலி தான்.. இன்னைக்கு வேலை இல்லனாலும் எங்களுக்கு நாளைக்கு வேலை இருக்கும்.. ஆனா நீங்க பெரிய பிசினஸ் பண்றவங்க ஒரு நாளைக்கு பல நாளும் லாஸ் ஆகிடும், நீங்க வேலைக்கு போங்க என்று பதிலடி கொடுக்கிறார். அதன் பிறகு ரோகிணி இங்கிருந்து கிளம்புகிறார்.

அடுத்ததாக டாக்டர் கிரிஷ்ஷை பரிசோதனை சென்று விட்டு குழந்தைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை இப்ப நீங்க வீட்டுக்கு கிளம்பலாம் இரண்டு நாள் கழிச்சு கட்டப் பிரிக்க கூட்டிட்டு வந்தா போதும் என்று சொல்கிறார். இந்த விஷயத்தை ரோகினியிடம் சொல்ல போன் எடுத்துக் கொண்டு அவருடைய அம்மா வெளியே செல்ல முத்து பணத்தைக் கட்டி இவர்களை டிஸ்சார்ஜ் செய்கிறார்.

ரோகினி அம்மாவிடம் நீ ஊருக்கெல்லாம் போக வேண்டாம் இரண்டு நாளைக்கு ஆஸ்பத்திரி இல்லையே இரு நான் நைட் வந்து உங்களோடு இருக்கிறேன் என்று சொல்கிறார். சரி என்று சொல்லி அவர் உள்ளே வருவதற்குள் முத்து பணத்தை கட்டிவிட ரோகிணி நம்ம சரி நாங்க ஊருக்கு போய்ட்டு வரும் இன்னா இங்கேயே எங்கேயாச்சு ரூம் எடுத்து தங்கி இருக்கோம் என்று சொல்கிறார். மீனாவும் முத்துவும் நீங்க எதுக்கு வெளியே தங்கனும்? அதான் எங்க வீட்டுல இருக்கேன் அங்க வந்து தங்கிக்கோங்க என்று சொல்கிறார்.

ரோகிணி அம்மா வேண்டாம் என்று சொல்லியும் முத்துவின் ஆகும் அவரை அழைத்து வருகின்றனர். மறுபக்கம் ரோகினி அம்மா போன் எடுக்காததால் என்ன ஆச்சு என்று புரியாமல் டென்ஷனாக இருக்கிறார். எல்லோரும் சாப்பிட வர விஜயா மீனா மதியமும் சமைக்க கூடாதுன்னு தான் ஹாஸ்பிடல் போயிட்டா என்று திட்டிக் கொண்டிருக்க மீனா வீட்டுக்கு வர விஜயா என்ன ஊர் வேலை எல்லாம் முடிஞ்சதா என்று கேட்கிறார்.

அதன் பிறகு அண்ணாமலை டாக்டர் என்னம்மா சொன்னாங்க என்று கேட்க சாதாரண காய்ச்சல் தான் மூன்று நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாகிவிடும் என்று சொன்னதாக சொல்கிறார். பிறகு ரோகிணியின் அம்மா பின்னாடியே வந்து நிற்க இதை பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். உண்மை தெரிஞ்சு போச்சா அதனாலதான் அம்மாவ கூட்டிட்டு வந்து இருக்காளா? என்று குழப்பமடைகிறார்.

பின்னாடியே முத்துவும் கிரிஷ்ஷூம் வர விஜயா எதுக்கு இவங்கள இங்க கூட்டிட்டு வந்த என்று சத்தம் போடுகிறார். அண்ணாமலை குழந்தைக்கு பெரிய கட்டு போட்டு இருக்கு.. என்ன ஆச்சு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். மீனா நடந்ததை சொல்லி இரண்டு நாளைக்கு நம்ம வீட்ல இருக்கட்டும்னு தான் கூட்டிட்டு வந்தோம் என்று சொன்ன விஜயா கண்டவர்கள் வந்து தங்கறதுக்கு இது என்ன சத்திரமா என்று கோபப்படுகிறார்.

ரோகினி நம்ம நாங்க வெளிய தங்கி இருக்கிறோம் என்று தான் சொன்னோம். முத்து தான் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்துச்சு எங்களால உங்கள் குடும்பத்தில் பிரச்சனை வேண்டாம் என்று கிளம்ப முத்து நீங்க கிளம்பி போறதுக்கு அவங்களை கூட்டிட்டு வந்தேன் என்று தடுத்து நிறுத்துகிறார். தினம் தினம் பிரச்சனையா இருக்கு.. இதுல வேற இவங்க எங்க தங்குவாங்க என்று கேட்க ரோகினி என் ரூம்ல தங்கிக்கட்டும் என்று சொல்கிறார். மனோஜ்க்கு உதவி பண்ணதா சொல்றாரு அப்படி இருக்கும்போது அவங்களுக்கு நாம ஏதாவது பண்ணனும் இல்ல என்று சொல்கிறார்.

பிறகு உங்களுக்கு வேற யாரும் கிடையாதா நீங்களும் இந்த பையனும் மட்டும்தான் நான் என்று கேட்க பொண்ணு துபாய்ல இருக்கா என்று சொல்கிறார். அதன் பிறகு எல்லோரும் சாப்பிட சென்றதும் விஜயா நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது நாளைக்கு இவங்க கிளம்பியாகனும் உனக்கு தான் நல்ல ஐடியா பண்ண தெரியல என்று அதிர்ச்சி கொடுக்கிறார். உங்கள பாத்தாலே சரியா தோணல அப்பா அம்மா வேற இல்லன்னு சொல்றாங்க எங்கயாச்சும் ஓடிப்போய்ட்டாங்களோ என்னவோ என்று தரக்குறைவாக பேச இப்போ ரோபோ ஆன்ட்டி என்று கத்துகிறார். என்னமா என்று கேட்க அவங்க காதுல கேட்டுட போகுது என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 01-06-24
siragadikka aasai serial episode update 01-06-24