Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்துவிடம் சிக்கிய ரோகினி. அவமானப்பட்டு நிற்கும் மனோஜ். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 03-02-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து ரோகினியின் ஓனரை டிராப் செய்ய அவர் பணத்தை கொடுக்காமல் நேராக உள்ளே சென்று விடுகிறார்.

இதனால் முத்து அவரை பின்தொடர்ந்து செல்கிறார். இங்கே ஓனரை பின்தொடர்ந்தது வர ரோகினி அக்கவுண்ட்ஸ் டீடைல் எடுத்து வரவா என்று கேட்க அவர் அதை பார்க்க வரல எனக்கு ஹைப்ரோ பண்ணனும் என்று சொல்ல உள்ள ஆளுங்க இருக்காங்க ஃப்ரீ ஆனதும் பண்ண சொல்றேன் மேடம் என்று சொல்ல நீ ப்ரியா தானே இருக்க நீயே பண்ணு என ரோகிணியை வேலை வாங்குகிறார்.

பிறகு ரோகிணி உள்ளே சென்றதும் முத்து மேலே வந்து மேடம் நீங்க பாட்டுக்கு இறங்கி வந்துட்டீங்க என்று கேட்க வேற என்ன பண்ணனும் என்று ஓனர் கேட்க காசு கொடுக்கணும் என்று சொல்ல சாரிப்பா என்னுடைய கார் என்ற ஞாபகத்தில் இறங்கி வந்துட்டேன் என்று சொல்லி கவுண்டரில் இருக்கும் பெண்ணிடம் அவர் கேட்கிற பணத்தை கொடுத்து அனுப்புங்கள் என சொல்லி உள்ளே சென்று விடுகிறார்.

பியூட்டி பார்லருக்கு வந்து இந்த லேடி இவங்களுக்கு காசு கொடுக்க சொல்லுது என முத்து பேச கவுண்டரில் இருந்த பெண் அவங்க தான் சார் ஓனர் என சொல்ல அப்ப ரோகினி? அவங்க என்னாச்சு என்று கேட்க அவங்க பார்லரை இவர்களுக்கு வித்துட்டாங்க இப்போ அவங்களும் இங்க எங்கள மாதிரி ஒரு ஸ்டாப்பா தான் வேலை செய்றாங்க என்ற உண்மையை கூறுகிறார்.

அதன் பிறகு முத்து பியூட்டி பார்லரை வீடியோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்து அப்பாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லலாம் என்று போனை எடுக்க வேண்டாம் நேர்ல போய் சொல்லிக்கலாம் என்று மனதை மாற்றிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

அப்பாவிடம் ரகசியமாக விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைகிறார். உடனே அம்மாவை கூப்பிட்டு சொல்லணும் என்று முத்து சொல்ல இந்த விஷயத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம். விஜயா மனோஜ் வேலைக்கு போகாமல் இருக்கும் விஷயத்தை மூடி மறைச்சது போல இதையும் மறைச்சிக்கிட்டு இருக்கலாம் என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கலாம் அமைதியா இரு என சொல்லி விடுகிறார்.

பார்லரில் இருந்து வீட்டுக்கு வரும் ரோகிணி மனோஜ் வந்துட்டாரா அங்கிள் என்று கேட்க யார் வராங்க போறாங்கன்னு நாங்க என்ன கணக்கா எடுத்துட்டு இருக்கோம் என முத்து கவுண்டர் போட அண்ணாமலை இன்னும் வரல மா என சொல்கிறார். அதன் பிறகு விஜயா ரோகினி வந்துட்டியா உனக்காக ஜூஸ் போட்டு வச்சிருக்கேன் என்று சொல்கிறார்.

ஆமா ஆண்ட்டி இன்னிக்கு பார்லர்ல நிறைய வேலை என்று சொல்ல நீ ஏன் மா வேலை செய்ற? ஸ்டாப்பை வேலை வாங்க வேண்டியதுதானே என்று சொல்கிறார். அது மட்டுமல்லாமல் உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லுமா நான் கல்லா பெட்டியில் வந்து உட்காருகிறேன். நீதான் விஜயா பியூட்டி பார்லர்னு என் பேரை வச்சிருக்க என்று பெருமையாக பேச முத்து மீனா கூட தான் உங்க பேர்ல பூ கடை வச்சிருக்கா என கூறுகிறார்.

ரோகினி பார்லரை விற்ற விஷயத்தை முத்து உலர வர அண்ணாமலை கையைப் பிடித்து அடக்குகிறார். அடுத்து மீனா முத்துவுக்கு தோசை சுட்டுக் கொடுக்க கிச்சனில் உட்கார்ந்து முத்து சாப்பிட்டு கொண்டு இருக்க விஜயா இது என்ன புது பழக்கம் என மீனாவை திட்டுகிறார்.

அதன் பிறகு மனோஜ் டிப் டாப் ஆக ரெடி ஆகி அம்மா பசிக்குது சாப்பாடு ரெடியா என கேட்க முத்து மீனா இவனுக்கு பத்து தோசை என்றால் கூட சுட்டுக்கொடு அவன் என்ன வேலையா செய்யப் போறான் பார்க்ல படுத்துட்டு தூங்க தானே போறான் என நக்கல் அடிக்கிறார்.

பிறகு ஒருவர் அயர்ன் செய்த துணிகளை கொண்டு வந்து கொடுத்து 350 ரூபாய் ஆச்சு என்று சொல்ல முத்து அவ்வளவா ஆகுது என்று கேட்கிறார். இதுல என் துணி எதுவும் இல்லை அப்பா நீ ஏதாச்சும் துணி கொடுத்த என்று கேட்க அவர் இல்லை என்று சொல்லிவிட மீனாவிடம் கேட்க மீனாவும் இல்லை என்று சொல்லிவிடு அப்படின்னா இது சாரோடது தான் என்று முடிவெடுத்து மனோஜிடம் நீ தான் கொடுத்தியா என்று கேட்க ஆமா அதுக்கு என்னடா இப்போ என்று சொல்ல சரி பணத்தை கொடுத்து விடு என்று கூறுகிறார்.

மனோஜ் பணமா என்கிட்ட இல்லையே என்று தடுமாற வேலையே இல்ல பணம் எங்கிருந்து இருக்க போது என அவமானப்படுத்துகிறார் முத்து. விஜயா நீ போடா நான் கடைக்கு வந்து பணத்தை தரேன் என்று அயன் துணியை கொண்டு வந்தவரை அனுப்ப முயற்சி செய்ய முத்து இழுத்து பிடித்து இவனெல்லாம் நம்பாத, பணம் வராது என்று சொல்ல ரோகிணி கோபப்பட்டு பணத்தை எடுத்து வந்து கொடுக்கிறார்.

பிறகு முத்து நீ எப்படியும் வேலை தேடி வேலைக்கு போக போறது இல்ல பேசாம ஒரு அயன் கடையை வைத்துவிடு ஒரு வீட்டுக்கு 350 ரூபாய் வருது, ஒரு நாளைக்கு 10 வீடு நான் கூட 3500 மாதத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல சம்பாதிக்கலாம். பார்க்ல உக்காந்து பெஞ்சத் தேக்கிறதுக்கு பதிலா துணியைத் தேய், உன்னோட துணியக்கூட ஃப்ரீயா தேச்சுக்கலாம் என்று சொல்ல மனோஜ் அவமானப்பட்டு நிற்கிறார்.

ரோகினி இதுக்கு தான் எனக்கு இந்த வீட்ல இருக்கவே புடிக்கல என்று கூறுகிறார். அண்ணாமலை நீ வேலைக்கு போடா சவாரிக்கு லேட் ஆகுது என்று அனுப்ப ஆமாம் எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன் என்று முத்து கிளம்பிச் செல்ல விஜயா மீனாவை முறைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 03-02-24
siragadikka aasai serial episode update 03-02-24