தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கிப்ட் கொடுத்ததை தொடர்ந்து ஒவ்வொருத்தராக தங்களது கிப்ட்டை கொடுக்கின்றனர்.
ரவி என்னுடைய கிப்ட் கேக்கு தான்.. அட கேக்கோட பேரு நாச்சியார் கேக் தான் என்று சொல்ல ஸ்ருதி போனை கிப்ட் ஆக கொடுக்கிறார். அதன் பிறகு விஜயா பார்வதியை கூட்டி வந்து டிவியை எடுத்துக் கொடுக்க பார்வதி எந்த மருமகளும் மாமியாருக்கு இவ்வளவு பெரிய கிப்ட் கொடுக்க மாட்டாங்க என்று சொன்னதும் நாச்சியார் பாட்டி அவ சொன்னா மாதிரியே அப்படியே சொல்லிட்ட என்று சொல்லி பல்பு கொடுக்கிறார்.
அடுத்ததாக மனோஜ் எல்லாரும் கிப்ட் கொடுத்துட்டோம் உங்க கிப்ட் யாருக்கு என்று கேட்க பாட்டி முத்து வரட்டும் என்று சொல்ல அவன் காலையில தான் வருவான் என்று மனோஜ் நக்கலாக சொல்லிக் கொண்டிருக்க மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் முத்து.
உள்ளே வந்த முத்துவை பிடித்து பாட்டி எங்கடா போன என்று கண்டிக்க மனோஜ் பாட்டிக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு வந்திருக்க என்று கேட்கிறான். நான் எதுவும் வாங்கிட்டு வரல என்று சொன்னதும் மனோஜ் நான் சொன்னா மாதிரியே நடந்துருச்சு என்று சந்தோஷ பட முத்து வாங்கிட்டு வரல ஆனா கூட்டிட்டு வந்திருக்கேன் என்று சொல்லி நாச்சியார் பாட்டியின் சிறு வயது தோழிகளை வீட்டிற்குள் அழைத்து சர்ப்ரைஸ் செய்கிறான்.
30 வருஷத்துக்கு பிறகு தனது தோழிகளை பார்த்த பாட்டி கண்கலங்கி சந்தோஷப்பட்டு அவர்களிடம் சந்தோஷமாக பேசி சிரிக்கிறார். இதைப் பார்த்து மற்ற குடும்பமும் ரசிக்க மனோஜ் சோகமாக ரோகிணி கண்டிப்பா ஸ்பெஷல் கிப்ட் அவங்களுக்கு கிடைக்காது ஏன்னா மீனா எதுவுமே செய்யல என்று சொல்கிறார்.
உடனே மீனா முத்துவிடம் நானும் பாட்டிக்காக ஒன்னு பண்ணி வச்சிருக்கேன் என்று வீடியோ எடுத்த விஷயத்தை சொல்ல அப்படியா அதை எல்லாருக்கும் போட்டு காட்டிடுவோம் என்று டிவியில் ஓட விட பாட்டி தனது என்பது வருட வாழ்க்கை பயண அனுபவத்தை சொல்கிறார். மீனாவின் இந்த செயலால் ரோகிணி பல்பு வாங்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
