Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பல்பு வாங்கிய மனோஜ். அண்ணாமலைக்கு வந்த மூச்சுத் திணறல். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 10-02-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து ரோகிணி வாங்கி வந்த தோசையை சாப்பிட அதை வைத்து வீட்டில் பிரச்சனை விதைக்க ரோகிணி மேனஸ் இல்லாமல் இப்படி பண்றாரு என்று திட்டுகிறார்.

மீனா அவரும் தெரிந்து சாப்பிடல தெரியாம தான் சாப்பிட்டாரு அதற்காக ஏன் இப்படி பேசுறீங்க? ஒருத்தர் சாப்பிடும் போது இப்படி பேசுறது பெரிய பாவம் என சண்டை போட விஜயா நீ என்ன அவ கிட்ட சண்டை போடற என்று மீனாவை திட்டுகிறார். அண்ணாமலை இது கூட்டு குடும்பம் வாங்கிட்டு வந்தால் எல்லாருக்கும் வாங்கிட்டு வந்து இருக்கணும் அப்படி இல்லன்னா ரூம்ல கொண்டு போய் மனோஜ்க்கு கொடுத்து இருக்கணும் இப்படி டேபிள் மேல வச்சிட்டு போனால் அது யார் வேணாலும் எடுத்து சாப்பிடலாம் என்று தான் அர்த்தம், இனிமே இப்படி பண்ணாத என்று ரோகினிக்கு அட்வைஸ் சொல்லுகிறார்.

சாப்பிட்டு முடித்த முத்து எவ்வளவு செலவாச்சு என்று கேட்க மனோஜ் விடாத அவன்கிட்ட தோசை வாங்குன காசு கேளு ரோகிணி என்று சொல்ல நீ இப்படித்தான் கேட்பேன்னு தெரியும் ஆனால் தர முடியாது டா என்று முத்து பதிலடி கொடுக்கிறார். அது மட்டும் இல்லாம நீ பார்க்குல படுத்துட்டு தூங்கிட்டு இருந்தபோது என் பொண்டாட்டி தானே சாப்பாடு கட்டி அனுப்பிச்சா அதுல இத கழிச்சிக்க எனவும் பதிலடி கொடுக்கிறார்.

பிறகு விஜயா பார்வதியுடன் வெளியே வந்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப ஒரு ஐடியா கேட்கிறார். விஜயா நீ கூப்பிட்ட தால் நான் சாப்பிடாமல் வந்துவிட்டேன் பசிக்குது என்று சொல்லி மனோஜ் வேலை பார்க்கும் ஹோட்டலுக்குள் விஜயாவை கூட்டிக்கொண்டு வர இதை பார்த்த மனோஜ் முதலில் அம்மா என சந்தோஷப்பட அதன்பிறகு ஐயோ அம்மா பார்த்தா பிரச்சனை ஆகிடும் என ஓடி ஒளிகிறார். ‌

அதன் பிறகு வேறொரு வெயிட்டரை கூப்பிட்டு இந்த ஒரு ஆர்டர் மட்டும் நீங்க எடுத்துடுங்க என்று கெஞ்சி கூத்தாடி அனுப்பி வைக்கிறார். பிறகு இவர்கள் மசால் தோசையையும் பூரியையும் ஆடர் செய்து சாப்பிடுகின்றனர். விஜயா மனோஜ்-க்கு போன் போட்டு நான் ஹோட்டலுக்கு வந்து இருக்கேன். உனக்கு பூரி வேணுமா வாங்கிட்டு வரவா என்று கேட்க மனோஜ் வர லேட் ஆயிடும், மீட்டிங் போயிருக்கேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார்.

மறுபக்கம் ரோகினி வித்யாவிடம் அந்த பிஏவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து நீயே கொடுத்துடு என்று சொல்கிறார். வீட்ல எனக்கு பெரிய பிரச்சனையா இருக்குறது முத்து, மீனா தான். ஒன்னு நான் அந்த வீட்ல இருந்து வெளியே வரணும் இல்லனா அவங்களை அந்த வீட்டில் இருந்து வெளியே துரத்தனும் அவங்க வீட்டை விட்டு வெளியே போயிட்டாலே நான் சந்தோஷமா இருப்பேன். அதுக்கு ஒரு ஐடியா பண்ணனும் என்று வில்ல தனத்தோடு யோசிக்கிறார்.

அடுத்து வீட்டுக்கு வந்த ஸ்ருதி கொசு மருந்து எடுத்து வீடு முழுவதும் அடித்துவிட மீனா வேண்டாம் போதும் என்று சொல்லியும் சுருதி ஒரு பாட்டில் காலியாகும் அளவிற்கு அடித்துவிட்டு ஸ்டூடியோவில் இருந்து போன் வந்ததும் கிளம்பி விடுகிறார். அதன் பிறகு வீட்டுக்குள் நுழையும் அண்ணாமலை கொசு மருந்து ஸ்மல் தாங்காமல் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சரிந்து விழ மீனா எல்லோருக்கும் போன் போட யாரும் போனை எடுக்காத காரணத்தினால் ஹாஸ்பிடல் அழைத்துச் செல்ல ஆட்டோ பிடித்து வர ஓடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 10-02-24
siragadikka aasai serial episode update 10-02-24