Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயாவை திட்டிய அண்ணாமலை, சிட்டி போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 11-03-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரவி கிச்சடி செய்ய ரெடியாக முத்து நான் எதாவது உதவி செய்யட்டுமா என்று கேட்க நீ இந்த காய்கறி மட்டும் கட் பண்ணி குடு என சொல்கிறார்.

பிறகு அந்த வேர்க்கடலையின் தோலுரிக்கனும் என்று சொல்ல அதான் பார்க்கல வேர்க்கடலை சாப்பிட்டவன் இருக்கானே என்று மனோஜை கூப்பிட்டு உரிக்க சொல்ல வெளியில போய் என் போனுக்கு பக்கத்துல எத்தனை டிகிரி இருக்குன்னு பாரு நான் இதெல்லாம் செய்யணுமா என்று கேட்கிறார்.

மேலும் ரவியை சமையல்காரன் என்று சொல்ல ரவி கோபப்பட முத்து அவனுக்கு ஒரு வேலை இருக்கு உனக்கு அது கூட இல்லை என்று பதிலடி கொடுக்கிறார். எனக்கும் ரோகிணிக்கும் கிச்சடி வேண்டாம் நாங்க வெளியில் ஆர்டர் பண்ணிக்கிறோம் என்று சொல்லி வெளியே வருகிறார். பிறகு ரவி ரோகினியிடம் நான் நல்லா செய்வேன் என்று சொல்ல ரோகிணியும் கிச்சிடி பிடிக்காது வேண்டாம் என சொல்லி விடுகிறார்.

பிறகு ரவி சமைத்து வந்து எல்லோருக்கும் கொடுக்க எல்லோரும் ஆகா ஓகோ என பாராட்ட ரோகினி ஹோட்டலிலும் எதுவும் ஆடர் செய்ய முடியாமல் உள்ளே செல்ல பிறகு மனோஜ் யாருக்கும் தெரியாமல் கிட்சனுக்கு போய் கிச்சடியை போட்டு சாப்பிட தயாராக யாரோ மறைந்திருந்து சாப்பிடுவதை பார்க்க அது ரோகினி என தெரிய வருகிறது. பிறகு இருவரும் திருதிருவென முழித்து பிறகு ஒன்றாக சாப்பிட தொடங்க முத்து வர அவரிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

ஆனால் முத்து எதையும் சொல்லாமல் சொம்பில் தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு வெளியே சென்று விடுகிறார். அதன் பிறகு கிச்சடி சூப்பர் நீ உண்மையாகவே நல்ல செஃப் தான் என சீதா ரவிக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்ல விஜயா ஓடிவந்து இப்போ உனக்கு மாலை கட்ட நேரம் ஆகலையா என கேட்க மீனா சீதா நீ வா என அதட்டுகிறார்.

பிறகு விஜயா சுருதியை ரூமுக்கு கூட்டிச்சென்று சீதாவை பற்றி தப்பு தப்பாக சொல்கிறார். கல்யாணமான பையனும் கல்யாணம் ஆகாத பொண்ணும் கைகுலுக்கி பேசிக்கிட்டா பாக்குறவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா என சொல்ல அப்படியா சொல்றீங்க ஆன்ட்டி ஒரு நிமிஷம் என் கூட வாங்க என்று வெளியே பூட்டி வந்து எல்லோரிடமும் ரவியும் சீதாவும் கை கொடுத்து பேசியது உங்களுக்கு தப்பா தெரியுதா என கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ரவி எதுக்கு இப்படி எல்லாம் கேட்டுட்டு இருக்க என்று கேட்க இல்ல டவுட்டு அதை கிளியர் பண்ணிக்கணும்ல என்று கேட்க ரவி உனக்கு இதில் என்ன டவுட் என கேட்க எனக்கு டவுட் இல்ல உங்க அம்மாவுக்கு தான் டவுட் என விஜயாவை கோர்த்து விடுகிறார். எல்லோரும் எங்க சீதாவை பத்தி எங்களுக்கு தெரியாதா? தங்கமான பொண்ணு என கூறுகின்றனர்.

பிறகு ஸ்ருதி நீங்க வளர்ந்தது அந்த காலம் இப்போ ஒரு பொண்ணும் பையனும் பேசிக்கிட்டாலே தப்புன்னு நினைக்க கூடாது என அட்வைஸ் செய்ய அண்ணாமலை விஜயாவை கூப்பிட்டுச் சென்று திட்டுகிறார். வாயை அடக்கு இல்லைனா இப்படித்தான் அவமானப்பட்டு நிற்கணும் என கோபப்படுகிறார்.

மேலும் ஸ்ருதி உங்களுக்கு உங்க பையன் மேல நம்பிக்கை இல்லாம இருக்கலாம் எனக்கு என் புருஷன் மேல நம்பிக்கை இருக்கு என பதிலடி கொடுக்கிறார். மறுபக்கம் சத்தியா சிட்டி குடித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து தனக்கும் சரக்கு ஊற்ற சொல்ல வீட்ல பார்த்தா பிரச்சினையாகாதா? என கேட்க சீதா அக்கா வீட்டுக்கு போயிருக்கா அம்மா சாப்பிட்டு தூங்கிட்டு இருப்பாங்க என சொல்கிறார்.

என்ன விஷயம் சீதா எதுக்கு அக்கா வீட்டுக்கு போச்சு என கேட்க மாலை ஆர்டர் எடுத்து இருக்கும் விஷயத்தை சொல்ல முத்துவை பழி வாங்க இதுதான் சரியான சந்தர்ப்பம் நாளைக்கு 500 மாலையோடு கிளம்புற வண்டி மண்டபத்துக்கு போகக்கூடாது, புது ரவுடிகள உள்ள இறக்கி அந்த வண்டிய கடத்த சொல்லிடு என சிட்டி ப்ளான் போடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 11-03-24
siragadikka aasai serial episode update 11-03-24