தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யா என்னுடைய விஷயத்தில் தலையிடற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க அதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று முத்துவை அவமானப்படுத்த முத்து அங்கிருந்து வெளியேறுகிறார்.
இதைத் தொடர்ந்து செட்டுக்கு வந்த முத்து பேண்ட் பக்கத்தில் வைத்திருந்த சரக்கை எடுத்து ராவாக குடித்து செல்வத்திடம் சத்யா அவமானப்படுத்தி பேசியதை பற்றி சொல்லி வருத்தப்படுகிறார். நான் டிரைவர் அடைத்து வரைக்கும் இப்படியே தா இருக்கணும் என்னால என் பொண்டாட்டிக்கு எதையும் செய்ய முடியாதுன்னு சொல்றான் நேர்மையாக இருக்கிறது தப்பா என்று அழுது புலம்புகிறார் முத்து. மீனா இதெல்லாம் தெரிஞ்சா எப்படி தாங்குவா என்று கலங்குகிறார்.
அதன் பிறகு ஹாஸ்பிடலில் ஸ்கேன் ரிப்போர்ட் வர கை எலும்பு உடைந்து இருப்பதாகவும் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவும் சொல்கின்றனர். மீனா ஹாஸ்பிடல் வந்ததும் சீதாவும் அம்மாவும் டாக்டர் சொன்ன விஷயத்தை சொல்லி கலங்குகின்றனர். முப்பதாயிரம் பணம் கட்ட சொல்றாங்க என்ன பண்றதுன்னு தெரியல என்று அழுது புலம்புகிறார் அம்மா.
மொத்தமாக 18 ஆயிரம் ரூபாய் தான் இருக்கு மீதி பணத்துக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மீனா முத்துவுக்கு போன் போட முத்து போனை எடுக்க மறுக்கிறார். பிறகு தெரிந்தவர்களுக்கு போன் போட்டு பணத்தைக் கேட்க யாரிடமும் பணம் இல்லை என்று சொல்லி விடுகின்றனர். அந்த நேரம் பார்த்து ஹாஸ்பிடலுக்கு வந்தவர்கள் இந்த டாக்டர் ரொம்ப நல்லவரு ஏழைகளுக்கு கம்மியான காசுல சிகிச்சை கொடுக்கிறார் நீ வேணா டாக்டர் கிட்ட பேசி பாரு என்று சொல்ல மீனாவும் டாக்டரிடம் உதவி கேட்க அவர் கொஞ்சம் கொஞ்சமா பணம் கட்டுற மாதிரி ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.
அதோடு டாக்டர் இது பைக்ல இருந்து கீழே விழுந்து பட்ட அடி இல்லை, சண்டையில யாரோ கைய புடிச்சு முறிச்சிருக்காங்க என்று சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு சத்யாவுக்கு ஆப்ரேஷன் முடிந்து நார்மல் வார்டுக்கு மாற்ற மீனா எங்க விழுந்த? யாருடைய பைக்கு? என்ன ஏது? என்று விசாரித்து பைக்குக்கு சொந்தக்காரனை வர சொல்ல சத்யா திருத்திருவென முழிக்க உண்மையை சொல்லு யார் உன்னை அடித்தது என்று கேட்க அவரது அம்மா பதறுகிறார்.
கடைசியாக சத்தியா ஆமா பைக்ல இருந்து கீழே விழல என்று சொல்ல எல்லோரும் ஷாக் ஆகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
