தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜை கூட்டிக்கொண்டு நைசாக நழுவ முத்து மடக்கி பிடித்து உண்மையை சொல்லு என்று கேட்க மனோஜ் என் பிரண்டு கிட்ட தான் பணத்தை கடன் வாங்கினேன் என்று சொல்கிறார்.
நான் அந்த சந்தோஷை பார்க்கில் பார்த்து பேசினேன். அவர் கடன் கொடுக்கலன்னு சொல்லிட்டாரு என்று சொல்ல மனோஜ் இல்ல நான் அவர் கிட்ட தான் வாங்கினேன் என்று திருப்பி சொல்ல சரி அவருக்கு போன் போடு கேட்டுடலாம் என்று சொன்னதும் மனோஜ் திருதிருவென முழிக்க அண்ணாமலை கூப்பிட்டு உண்மையை சொல்லு என்று கேட்க மனோஜ் எனக்கு எதுவும் தெரியாதுப்பா என்று சொல்லியபடி இருக்க முத்து சொல்லுடா உண்மையை என்று அடிக்க கை ஓங்க ஆமா நான் தான் எடுத்தேன் என்று ஒப்புக் கொள்கிறார்.
எனக்கு வேற வழி தெரியல பா அம்மா தான் மீனா நகை இருக்குன்னு சொன்னாங்க முதல்ல அடகு வைக்கலாம்னு தான் போனேன் ஆனா பணம் பத்தல அதனால வித்துட்டேன் என்று சொன்னதும் உன்னோட திருட்டு புத்தி உன்னை விட்டு போகாதா என்று மனோஜை போட்டு அறைகிறார். துரத்தி துரத்தி அடிக்க விஜயா தடுக்க ஓடிவர அண்ணாமலை எல்லாம் உன்னால வந்தது.. எப்படி வளர்த்து வச்சிருக்கு பாரு என்று கோபப்பட அவன் ஏமாந்து போய் நின்னான். அந்த நகை பீரோல சும்மா தானே இருந்தது என்று சொல்ல அதுக்காக வித்துடுவியா? வித்ததும் இல்லாம அந்த பழியை தூக்கி மீனாவோட அம்மா மேல போடுற.. என் அம்மா மேல போடுற நீ எல்லாம் பொம்பளையா? உன் கூட தான் வாழ்ந்தேன் என்று நினைக்கும் போது கேவலமா இருக்கு என்று கோபப்படுகிறார்.
உன் பிள்ளைக்காக நீ என்னை ஏதாவது பண்ணிடுவியோனு பயமா இருக்கு என்று சொல்ல விஜயா ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என்று கேள்வி கேட்க உன் கிட்ட பேசுறது தப்புதான், இந்த ஜென்மத்துல என் முகத்துலயே முழிக்காத என அதிர்ச்சி கொடுக்க விஜயா எல்லாருக்கும் நான் தானே பிரச்சனை என்று ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொள்கிறார்.
மனோஜ் ரோகினி ரவி என மூன்று பேரும் சேர்ந்து கதவை தட்ட விஜயா திறக்காமல் இருக்க மீனா முத்துவை வைத்து அண்ணாமலையை கூல் செய்ய முயற்சி செய்கிறார். அம்மா ஏதோ அவசரத்துல பண்ணியிருப்பாங்க.. நகையை எடுக்கிற பிளான் கூட இந்த மனோஜ் தான் போட்டு கொடுத்திருப்பான். நீ வந்து கூப்பிடுப்பா அம்மா கதவை திறப்பாங்க என்று சொல்ல அண்ணாமலை நான் எதுக்கு வந்து கூப்பிடனும்? அவ பண்ணதை எல்லாம் மன்னிச்சு விட்டுட்டு போனதுனால தான் இன்னைக்கு இப்படி வந்து நிக்குது. இப்பவும் நான் பேசாம இருந்தா இந்த வீட்ல ஒரு ஜடம் மாதிரி இருக்குனு தான் அர்த்தம். சொல்லு நான் ஜடமா என்று கேட்டு கோபப்படுகிறார். இது எனக்கும் என் பொண்டாட்டிக்குமான பிரச்சனை இதுல நீ தலையிடாதே என்று சொல்லி விடுகிறார்.
அதன் பிறகு கதவைத் தட்டியவர்களும் அங்கிருந்து சென்றுவிட அண்ணாமலை சோபாவில் படுத்து தூங்கி விட மீனா விஜயா கதவை திறக்காததால் பயமாக இருப்பதாக சொல்ல முத்து அவங்க எதுவும் பண்ணிக்க மாட்டாங்க, கையும் களவுமா மாட்டிக்கிட்டதனால முகத்தை காட்ட முடியாமல் உள்ள உட்கார்ந்திட்டு இருப்பாங்க என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.