Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பல்பு வாங்கிய விஜயா. கலாய்த்த முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா சத்யா தான் பணத்தை எடுத்து இருப்பான் என பலியை தூக்கி போட்டு மீனா குடும்பத்தை அவமானப்படுத்தி பேச முத்து மனோஜ் தான் எடுத்திருப்பான் அவனுடைய கணக்குல 28 லட்சம் சேர்த்துக்கோங்க என்று சொல்ல ரோகிணி அவரே வேலைக்கு போறாரு சம்பாதிக்கிறார் அவர் எதற்கு சொந்த வீட்டில் பணத்தை எடுக்க போறாரு என்று கேள்வி கேட்க 27 லட்சமும் எங்க வீட்ல இருந்து தான் எடுத்துட்டு போனான் என்று பதிலடி கொடுத்து ஆப் ஆக்குகிறார்.

பிறகு விஜயா மீனாவின் குடும்பத்துக்கு போன் செய்து இன்னும் அரை மணி நேரத்துல ஒரு லட்ச ரூபா பணம் என் கைக்கு வரணும் இல்லனா போலீஸ் வரும் என்று மிரட்ட மீனாவின் குடும்பம் நாங்க பணத்தை எடுக்க என்று சொல்வதற்காக கிளம்பி விஜயா வீட்டுக்கு வருகின்றனர்.

வீட்டுக்கு வந்தவர்களை விஜயா நிற்க வைத்து அவமானப்படுத்தி பணத்தைக் கேட்க அண்ணாமலை முத்து என எல்லோரும் மிக அவை அடக்க முயற்சி செய்ய விஜய்யா நான் எதுக்கு அமைதியா இருக்கணும் காணாம போனது என்னுடைய பணம் எனக்கு இப்போ பணம் வந்தாலும் இல்லனா போலீசுக்கு போன் பண்ணுவேன் என்று சொல்லி மனோஜை போலீஸ்க்கு போன் பண்ண சொல்கிறார்.

மனோஜ் போலீஸ் எல்லாம் எதுக்கு என்று கேட்க மீனாவின் குடும்பத்தினர் ஒவ்வொருத்தராக சத்தியா பணத்தை எடுக்கவில்லை என்று சொல்லி விஜயா அதை நம்ப மறுக்கிறார். பைக்கை திருடுனவன் இதைத் திருடி இருக்க மாட்டானா என்று அவமானப்படுத்தி பேசுகிறார்.

ரோகினி அது மாமா கஷ்டப்பட்டு சம்பாதிக்க பணம் எடுத்திருந்தால் கொடுத்திடுப்பா என்று சொல்ல முத்து உன் புருஷன் தான் எடுத்திருப்பான் என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு விஜயா போலீசுக்கு போன் பண்ண சொல்லிக் கொண்டிருக்க அப்போது வீட்டுக்கு வரும் ஒருவர் மனோஜிடம் பிளைட் டிக்கெட் மற்றும் 10% டிஸ்கவுண்ட் கொடுத்திருக்காங்க என்று சொல்லி எட்டாயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்து வந்து கொடுக்கிறார். அதோட நீங்க பணம் கொடுத்து கவர்லயே கொண்டு வந்துட்டேன் என்று சொல்ல முத்து அந்த கவரைப் பார்த்து அது அப்பா கொடுத்த கவர் என்பது தெரிந்து கொள்கிறார்.

மனோஜ் டிக்கெட்டையும் அந்த கவலையும் வாங்கிக் கொண்டு நைசாக ரூமுக்குள் நுழைய முயற்சி செய்ய முத்து நான் ஃப்லைட் டிக்கெட் பார்த்ததே இல்ல குடுன்னு சொல்லி வாங்கி அந்த தவறை காட்டி அப்பா இது ஞாபகம் இருக்கா எங்க அம்மா கிட்ட கொடுத்த அதே கவர் மனோஜ் மாட்டிக்கிட்டா ஆடு சிக்கிடுச்சு என்று ஆடு போல் கத்தி விஜயா மனோஜ் மற்றும் ரோகிணி என மூவரையும் கலாய்த்து எடுக்கிறார்.

பிறகு விஜயா அதிர்ச்சி அடைந்து நிற்க மீனா இப்ப என்ன சொல்றீங்க அத்தை போலீசுக்கு போன் பண்ணனும் சொன்னீங்களே இப்ப பண்ணலாமா என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். என் குடும்பத்தை திருட்டு குடும்பம் இப்ப தெரிஞ்சு போச்சு இல்ல யாரு திருடுனதுன்னு இப்ப என்ன சொல்றீங்க என்று சீதா கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறார்.

சத்யா தெரியாத்தனமா பைக் திருடன அதுக்காக என் அப்பாவை இழந்துட்டேன் செத்தாலும் இனிமே அந்த மாதிரி ஒரு வேலையை செய்யக்கூடாதுன்னு இருக்கேன் என்று கண்ணீரோடு சொல்கிறார். அண்ணாமலை இதுக்குத்தான் பொறுமையா இருன்னு சொன்னேன் என்று விஜயாவை திட்டுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode update
Siragadikka aasai serial episode update