தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா மீனாவை கூப்பிட்டு நீ தன் காரணம் என்று பழி போட முத்து உனக்கு இது தேவை தான் அவங்களுக்கு போய் பரிதாபப்பட்ட பாரு இப்படி வா என்று கூப்பிட்டு செல்கிறார்.
பிறகு ரவி ரொம்ப வலிக்குதா என்று விஜயாவை கேட்க இந்த பக்கம் வாடா என்று பாசமா கூப்பிட்டு பளார் என்று ஒரு அறை கொடுத்து கழித்து திருப்ப முடியல வலிக்குதானா கேட்கிற என்று என்று திட்டி அனுப்புகிறார்.
அதைத்தொடர்ந்து முத்து மீனாவிடம் எங்க அம்மாவை சுளுக்கு பிடிக்க வச்சுட்டேன் என்று சொல்ல ஓ அப்போ அதுக்கு காரணம் நான் தான் நீங்களும் சொல்றீங்களா என்று கோபப்பட்டு முத்து கேட்ட டீயும் போட்டு தரமாட்டேன் என்று அடாவடி செய்கிறார்.
பிறகு அண்ணாமலை விஜயாவிடம் படி வைத்து கீழே படு மீனா உனக்கு தனியா கூட இருக்கட்டும் என்று சொல்ல விஜயா படுக்க வந்த மீனாவை தூரமா போய் படு என்று துரத்துவதோடு ரோகினியை கூப்பிட்டு தன்னோடு படுக்க சொல்கிறார். உள்ளே வந்த ஸ்ருதி ஆன்ட்டி படிவச்சி படுக்குறத பாக்கணும் என்று காத்திருக்க அவர் படுக்கப் போகும்போது கொஞ்சம் லெஃப்ட் கொஞ்சம் ரைட்டு இப்போ ஓகே கழுத்து லேண்ட் ஆகிடுச்சு என்று விளையாடுகிறார்.
அடுத்த நாள் மனோஜ் கடைக்கு வந்த வித்யா ஃபோட்டோ ஒன்றை கொடுக்க அதுக்கு தினமும் பூ போட்டு பூஜை செய்ய வேண்டும் என்பதால் ரோகிணியை மீனாவை பூ கொண்டு வர சொல்ல மீனா கடைக்கு கிளம்பும்போது மலேசியா மாமாவை வழியில் பார்க்க அவர் மீனாவை பார்த்து எஸ்கேப்பாக முயற்சி செய்ய பின்னாடியே துரத்திச் செல்கிறார்.
இதனால் மலேசியா மாமா ரோகினி பாப்பா கடை பக்கத்துல தான் இருக்கு அங்க போயிடலாம் என்று கடைக்கு வருகிறார். மாமாவை மிஸ் பண்ணிட்ட மீனாவும் கடைக்கு கிளம்பி வருகிறார். முத்து செல்வத்திற்காக ஃபிரிட்ஜ் வாங்குவதற்காக கடைக்கு கிளம்பி வருகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் முடிவடைகிறது.
