Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்துக்கு கொடுத்த ஷாக், அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 21-06-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவிடம் இருந்து தப்பி மலேசியா மாமா ரோகினி கடைக்கு வர அதை பார்த்து ரோகினி மற்றும் வித்யா அதிர்ச்சி அடைகின்றனர்.

மலேசியா மாமா மீனா பொண்ணு என்ன பார்த்துட்டு துரத்திட்டே வந்துச்சு.. அந்த பொண்ணு பார்த்ததும் நான் எஸ்கேப் ஆகி இங்க வந்துட்டேன் என்று என்று சொல்ல ரோகிணி மீனாவை வர சொல்லி இருப்பதை நினைத்து பயப்பட சரியாக மீனாவும் வந்துவிடுகிறார்.

பிறகு வித்யா மலேசியா மாமாவுடன் சென்று உள்ளே ஓரிடத்தில் மறைந்து கொள்ள ரோகினி பூவை வாங்கிக் கொண்டு மீனாவை வாசலோடு அனுப்பி வைக்க மீனா நானே போட்டோவுக்கு பூ போட்டுறேன் என்று சொல்லி உள்ளே வருகிறார். இதனால் ரோகிணி பதற்றம் அடைய வெளியே போயிருந்த மனோஜ் கடைக்கு வந்து விட பதற்றம் இன்னும் அதிகமாகிறது.

அதோட முத்து செல்வத்தோடு கடைக்கு வந்து விட ரோகிணி உச்சகட்ட அதிர்ச்சி அடைய வித்யா பிரவுன் மணியை பிரிட்ஜ்க்குள் ஒளித்து வைக்கிறார். முத்து செல்வத்துக்கு பிரிட்ஜ் பார்க்க வந்ததாக சொல்லி உள்ளே சென்று பிரிட்ஜை பார்க்க செல்வம் ஒரு பிரிட்ஜ் பார்த்து பிடித்திருப்பதாக சொல்லி கிட்ட போகிறார்.

முத்து அதை திறக்க முயற்சி செய்யும்போது வித்தியா அதுக்குள்ள தாண்டி அந்த பிரவுன் மணி இருக்கான் என்று ஓடிவந்து அந்த ஃப்ரிட்ஜை திறக்க விடாமல் தடுத்து நிறுத்துகிறார். இந்த பிரிட்ஜை பார்க்க வேண்டாம் வேற பிரிட்ஜ் போய் பாருங்க என்று சொல்ல மனோஜ் திறந்து பார்க்கட்டும் விடு என்று சொல்ல ரோகிணி அந்த பிரிட்ஜ் அவ வாங்கிக்கிறதா சொல்லி இருக்கா என்று சொல்கிறார்.

முத்து செல்வத்துக்கு அதான் புடிச்சிருக்கு அவனுக்கு அதை கொடுத்துட்டு இந்த பொண்ணுக்கு வேற ஏதாவது கொடு என்று சொல்கிறார். இப்ப 3000 பணம் கட்டிடுவான் மீதி இன்ஸ்டால்மெண்ட்ல கட்டுவான் என்று சொல்ல மனோஜ் இன்ஸ்டால்மென்ட்ல தர முடியாது என்று சொல்கிறார். ரோகிணி வித்யா மொத்த பணத்தையும் கட்டிடுவா என்று சொல்லி மனோஜ் மனசை மாற்ற மனோஜ் பிரிட்ஜ் வித்யாவுக்கு தான் என்று சொல்ல முத்து கோபப்பட செல்வம் முத்து, மீனாவை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார்.

அதன் பிறகு பிரவுன் மணி மணிரத்தினம் படத்தில் எனக்கு வாய்ப்பு எல்லாம் வாங்கி தரப் போறது இல்ல ரோகிணி பாப்பா முதல் மரியாதை கிராமத்துக்கு வர சொல்லி இருக்கும்போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது அதுக்கப்புறம் திரும்ப வீட்டுக்கு வர சொல்லி இருக்கும்போது முழுசா தெரிந்து போச்சு உங்க வீட்டு பிரச்சனைக்கு என்னை நடிக்க வைத்து பயன்படுத்திக்கிட்டீங்க. ஆனா என்னால உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னா அதுல எனக்கு சந்தோஷம்தான் இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்று பிரவுன் மணி கிளம்பி செல்கிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த மீனா முத்துமிடம் மலேசியா மாமாவை பார்த்ததும் அதைப்பற்றி ரோகினி இடம் பேசியதும் முகம் மாறியதை பற்றியும் சொல்ல முத்து இந்த பார்லர் அம்மா ஏதோ வில்லங்கமான வேலையை பண்ணிக்கிட்டு அப்பா மலேசியாவில் இருக்கார்னு கதை விட்டுக்கிட்டு இருக்கு.. எனக்கு ஆரம்பத்தில் இருந்து அந்த மலேசியா மாமா மேல ஒரு சந்தேகம் இருக்கு என்று பேச இதை ஒட்டு கேட்ட ரோகினி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 21-06-24