Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயாவை திட்டிய அண்ணாமலை. ரவிக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து எதுவாக இருந்தாலும் என்கிட்ட நேரா பேச வேண்டியதுதானே எதுக்கு அப்பா கிட்ட வந்து சொன்ன என்று கேட்க சொல்லி அழுவதற்கு ஒரு ஆள் வேணும் இல்ல என்று சொல்ல முத்து அதுக்கு அப்பாகிட்ட சொல்லுவியா என்று கேட்கிறார்.

மீனா எனக்குத்தான் அப்பா இல்லையே இந்த வீட்டில எனக்காக ஆறுதலா பேசுற ஒரே மனுஷன் மாமா மட்டும் தான் அவர்கிட்ட தான சொல்லி கஷ்டப்பட முடியும் அதுவும் தப்புனா இனிமே சொல்லல மன்னிச்சிடுங்க என்று சொல்ல முத்து வருத்தப்பட்டு நிற்கிறார்.

அடுத்ததாக விஜயா மொட்டை மாடியில் நின்று கொண்டு பார்வதிக்கு போன் போட்டு முத்து மீனா சண்டையை சொல்லி சந்தோஷப்படுகிறார். இன்னும் கொஞ்ச நாள்ல நடுரோட்டில் நின்னு சண்டை போடுவாங்க இவன் அடிக்கிற அடியில அவளே அறுத்துகிட்டு ஓடி போய்டுவா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று பேசி திரும்ப அங்கு அண்ணாமலை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

குடும்ப பிரச்சினையை இப்படி எல்லாருக்கும் சொல்லிக்கிட்டு இருக்க உனக்கு அசிங்கமா இல்லையா என்று அண்ணாமலை விஜயாவை திட்ட நான் பார்வதி கிட்ட தானே சொன்னேன் என்று சொல்ல தம்பட்டத்தை மாட்டிக்கிட்டு ஊருக்கே போய் சொல்லிட்டு வா என்று கோபப்படுகிறார். பரசருக்கு போன் பண்ணி உன்ன பத்தி சொல்லிட்டு வரேன் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

முத்து உன்னோட பையன் மீனா உன்னோட மருமகள் அவங்க சண்டை போடுவதைப் பார்த்து சந்தோசமா சிரிக்கிற.. முடிஞ்சா பிரச்சனையை தீர்த்து வை இல்லன்னா அமைதியா இரு என்று அட்வைஸ் பண்ண விஜயா கீழே இறங்கி வருகிறார். அதன் பிறகு சிட்டி செட்டுக்கு வந்து இன்னும் மூணே நாளில் மொத்த பணத்தையும் கொடுக்கணும் இல்லனா காரை தூக்கிட்டு போயிடுவேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். உங்களுக்காக என்னை அடிச்சான்ல முத்து அவன்கிட்ட போய் பணத்தை கேளுங்க கொடுப்பான் என்று வார்னிங் கொடுத்து கிளம்புகிறார்.

அடுத்ததாக ஸ்ருதி இன்னைக்கி நீயே வந்து பிக்கப் பண்ணிக்கிறியா இல்லனா ரெஸ்டாரன்ட் வந்துடவா என்று கேட்க இன்னைக்கு ரெஸ்டாரன்ட்ல ஒரு பார்ட்டி இருக்கு அதனால லேட் ஆகும் நீ வந்துடு என்று ரவி சொல்ல ஸ்ருதி அப்போ எனக்கு பார்ட்டி தரமாட்டியா இன்னிக்கு என்ன நாள் என்று கேட்க இன்னைக்கு மண்டே வேற என்ன என்று ரவி சொல்ல சுருதி கோபப்படுகிறார்.

இன்னிக்கு நாம முதல்முறையா மீட் பண்ண நாள். இதெல்லாம் கூட உனக்கு ஞாபகத்தில் இல்லையா இதுதான் நீ வச்சிருக்க லவ்வா என்று கோபப்படுகிறார். இதெல்லாம் கூடவா ஞாபகம் வச்சுப்பாங்க பொண்ணுங்க ஞாபகம் வச்சுக்கறது சரியா அந்த டேட்ல கேட்டு ஒரு சண்டைய இழுக்குறதுக்கு தான் என்று ரவி செல்ல ஓ அப்படியா என் கூட வா என்று ரவியை இழுத்துச் சென்று அண்ணாமலையிடம் ஆண்ட்டியை முதல்முறையா எங்கே எப்போ பார்த்தீங்க என்று கேட்க ரவி அதெல்லாம் எவ்வளவு நாளாச்சு இப்ப எப்படி ஞாபகம் வைத்துக்கொண்டு இருப்பாரு என்று சொல்ல அண்ணாமலை கரெக்டா விஜயாவை பார்த்த முதல் சந்திப்பை பற்றி சொல்ல ரவி ஷாக்காகி நிற்கிறார்.

அதோடு நிறுத்தாமல் ரவியை கூட்டிச்சென்று கிச்சனில் இருக்கும் விஜயாவிடம் முதல் முறையா அங்கிளை எப்போ பார்த்தீங்க என்று கேட்க விஜயா அவரை ஏன்டா பார்த்தோம்னு இருக்கு இதுல இதெல்லாம் எங்க இருந்து ஞாபகம் வச்சுகிறது என்று சொல்ல உங்க அம்மாவோட மெண்டாலிட்டி தான் உனக்கு இருக்கு என்று ரவியை திட்டுகிறார். பிறகு விஜயாவிடம் அங்கிள் உங்களை எப்போ எங்க பார்த்தாரு என்ன ட்ரெஸ்ல பார்த்தாரு இது எல்லாமே கரெக்டா சொல்றாரு என்று சொல்ல விஜயா வெக்கப்பட்டு நிற்கிறார்.

அடுத்து ரோகிணி ரூமுக்கு வந்து நீங்க மனோஜை எப்போ எங்க பார்த்தீங்க என்று கேட்க ரோகினியும் அவரை ஆபீஸ்ல வேலையை விட்டு துரத்தும் போது பார்த்தேன் என்ற விஷயத்தை சொல்கிறார். பிறகு மனோஜிடம் சென்று போனில் பேசிக் கொண்டிருப்பவரை கூப்பிட்டு ரோகினியே எப்போ எங்க பார்த்தீங்க என்று கேட்க அவரும் கரெக்டாக சொல்ல எனக்குத்தான் இப்படி ஒருத்தன் கிடைக்கல என்று ரவியை திட்டுகிறார் ஸ்ருதி.

விஜயா அண்ணாமலையிடம் அதே வெக்கத்தோடு காபி ஆற்றி கொடுத்துக் கொண்டிருக்க ரவியும் ஸ்ருதியும் இதை ஆச்சரியத்தோடு பார்த்து ரூமுக்கு சென்று விடுகின்றனர். அதன் பிறகு ரவி நான் செஞ்சது தப்புதான் என்று சொல்ல சுருதி என்னை நீ டப்பிங் ஸ்டுடியோவிற்கு சைக்கிள்ல உட்கார வைத்து கூட்டிட்டு போகணும் அதுதான் உனக்கு கொடுக்குற தண்டனை என்று கிளம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode update
Siragadikka aasai serial episode update