தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கடை திறப்பு விழா நடக்க விஜயாவை அண்ணாமலை விஜயாவிடம் ரிப்பனை வெட்டி கடையை திறக்க சொல்ல முக்கியமான ஒரு ஆள் வரணும் அதுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். அதன் பிறகு ஸ்ருதியின் அம்மா வர விஜயா ஓடிச் சென்று அவரை வரவேற்கிறார்.
அதன் பிறகு ரிப்பனை வெட்டி கடையை திறக்க அண்ணாமலை மீனாவிடம் ஏம்மா உங்க வீட்ல இருந்து யாரும் வரலை என்று கேட்க விஜயா அவர்கள் வராதது நல்லது தான் வந்திருந்தா இது எல்லாம் பார்த்து பொறாமை தான் படுவாங்க என்று அவமானப்படுத்துகிறார். அண்ணாமலை விஜயாவை பிடித்து திட்ட மீனா அவங்க வந்தா அவமானப்படணும் அதனாலதான் நான் கூப்பிடல என்று சொல்கிறார்.
அதன் பிறகு மிக்ஸி மிக்ஸி பார்க்கணும்னு சொன்னியே வா போகலாம் என்று கூட்டி செல்கிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா ஏசி ஒன்றை பார்த்து ஒன்றல்ல ரூபாய் மதிப்புள்ள ஒன்றை தேர்வு செய்கிறார். மீனா விலை கம்மியான மிக்ஸி ஒன்றை எடுத்துக் கொண்டு வருகிறார். இதைப் பார்த்த விஜயா எங்கே போற என்று கேட்க பொருள் வாங்கணும் பில்லு போடணும் இல்ல என்று சொன்னேன் விலையை பார்த்துவிட்டு அம்மா ஒன்றரை லட்ச ரூபாய்ல ஏசி வாங்கி இருக்காங்க அவங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் பில்லு என்று சொல்லி தடுத்து நிறுத்துகிறார். மனோஜ் ஆன்ட்டிக்கு தான் ஃபர்ஸ்ட் பில் தள்ளுங்க என்று சொல்லி அவருக்கு பில்லு போட்டு கொடுத்ததும் பாட்டி மீனாவை கூட்டி வந்து பில்லு பாட சொல்கிறார்.
அதன் பிறகு பாட்டி விஜயாவை கூட்டிட்டு போய் எதுக்கு மீனாவை அவமானப்படுத்தற மாதிரி பேசுற என்று திட்டுகிறார். அவ கைராசி காரி. அவளை பத்தி ஏதாவது பேசுங்க நான் அவளுக்கு சப்போர்ட்டா வந்து நிற்பேன் என்று வெளுத்து வாங்குகிறார். இதை தொடர்ந்து மனோஜ் கடையில் வேலை செய்யும் பழைய தொழிலாளர்களை வரச் சொல்லி இனிமே உங்களுக்கு இங்க வேலை இல்லை என்று துரத்தி விடுகிறார். எனக்கு தேவை புது ரத்தம் தான் நீங்க எல்லாம் பழைய பீசுங்க என வெளியே துரத்த அவர்கள் ஒரு முதலாளியா எப்படி இருக்கனும்னு தெரியல இவர் அனுபவிக்க போறது பார்க்க தானே போறோம் என்று சாபம் விட்டு வருகின்றனர். மனோஜின் நடவடிக்கையை பார்த்த ரோகினி சூப்பர் என பாராட்டுகிறார்.
அதன் பிறகு மனோஜ் ரோகினி வீட்டுக்கு வர மனோஜ் ரொம்ப டயர்டா இருக்கு தூங்கணும் என்று சொல்ல விஜயா கொஞ்சம் வெளியவே நில்லுங்க நான் போய் ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வரேன் ஊர்ல இருக்க எல்லாருடைய கண்ணும் உங்கள் மேல தான் இருக்கும். திருஷ்டி சுத்தி போட்டால் எல்லா டயர்ட் சரியாகி விடும் என்று உள்ளே போகிறார். இதைப் பார்த்து மனோஜ், ரோகிணி சந்தோஷப்படுகின்றனர்.இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.