Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்து சொன்ன வார்த்தை.கோபத்தில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மனோஜ் நான்காயிரம் பணம் குறைந்ததற்கான விளக்கத்தை சொல்லி நான் அந்த 4000 கொடுத்து விடுகிறேன்டா என்று சொல்கிறார்.

முத்து நீ தான் கொடுக்கணும் என்னமோ உன் பணத்தை எடுத்துக் கொடுக்கிற மாதிரி சொல்ற என அவமானப்படுத்த ரோகிணி ஸ்டாப் இட் என சத்தம் போட நான் வண்டியா ஓட்டுறேன் நிறுத்த சொல்றதுக்கு என முத்து நக்கல் அடிக்கிறார். பிறகு அவருடைய அப்பா காசை அவர் எடுத்தாரு, அதை எதுக்கு நீங்க கேக்குறீங்க இந்த வீட்ல எல்லாமே உங்கள கேட்டு தான் செய்யணுமா நீங்கதான் எல்லாத்துக்கும் செலவு பண்றீங்களா என்று கேள்வி கேட்க நீ நான் ஆமா அவர்தான் மாமாவுக்கு அடுத்ததா எல்லாத்துக்கும் பணம் கொடுக்கிறார் என்று கூறுகிறார்.

உடனே ரோகினி உங்களுக்கென்ன இப்போ பணம் தானே முக்கியம் என்று ரூமுக்கு சென்று தனது ஹேண்ட் பேக்கிலிருந்து நான்காவது பணத்தை எடுத்து வந்து முத்துவிடம் கொடுக்கிறார். பிறகு அண்ணாமலையிடம் அடுத்த மாசத்துல இருந்து வீட்டு செலவுக்கு எங்களுடைய ஷேரை நான் கொடுத்தேன் எங்களுக்காக யாரும் செலவு செய்ய வேண்டாம் என சொல்கிறார்.

பிறகு மீனாவிடம் அதைவிட அதிகமாக கொடுக்கனாளும் கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் உங்க பங்கு கொடுத்தா போதும் என பதிலடி கொடுக்கிறார். ஏங்க அந்த கரண்ட் பில் என்று முத்துவிடம் கேட்க அதை நேத்தே கொடுத்துட்டேனே என்று சொல்லும் முத்து இந்த வீட்டுக்கு நான் தான் வெளிச்சம் கொடுத்து இருக்கேன் என்று கூறுகிறார்.

அதன் பிறகு முத்து வெளியே சென்று வீட்டுக்கு வர மீனா வெளியே எங்கேயாவது கூட்டிட்டு போகுமாறு கோபப்படுகிறார். கையில தேன் எடுத்துட்டு மொட்ட மாடிக்கு போய் நிலாவ பாரு அதுதான் தேன்நிலவு என முத்து கிண்டல் அடிக்க மீனா முத்துவை அடிக்கிறார். என்ன நீ இப்பதான் அதிகமா அடிக்கிற நானும் திருப்பி அடித்து விடுவேன் என்று முத்து சொல்ல அடிப்பீங்களா எங்க அடிப்பீங்க என்று வம்பு இழுக்கிறார்.

அடுத்து மனோஜ் ஒரு பார்க்கிற்கு சென்று தூங்கி எந்திரிச்சு சாப்பிட்டு முடித்துவிட்டு திரும்பவும் தூங்கப்போகும் போது ரோகிணி ஃபோன் செய்து நான் உங்க ஷோரூம் வெளியே தான் இருக்கேன் உள்ள வரேன் உன்னுடைய கேபின் எங்க இருக்கு என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்க மனோஜ் நான் இப்போ வெளியே இருக்கேன் என்று சொல்லி சமாளிக்கிறார்.

அடுத்ததாக அந்த பிஏ விஜயாவுக்கு போன் செய்து மலேசியாவில் இருந்து என்று சொன்னதும் சொல்லுங்க சம்மந்தி என்ற விஜயா சந்தோஷமாக பேச கடைசியில் நான் ரோகிணி ஓட தாய் மாமா பேசுறேன். அவங்க அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல ரோகிணி பார்க்கணும்னு ஆசைப்படுறாரு அவர்கிட்ட சொல்லுங்க என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார். உடனே இங்கே யார் ரோகினிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode update
Siragadikka aasai serial episode update