Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அண்ணாமலை எடுத்த முடிவு. விஜயா சொன்ன வார்த்தை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை கண் விழிக்க விஜய்யா கண் கலங்க எனக்கு எனக்கு ஏதாவது ஆயிடுமோ நீ என்ன பண்ணுவீங்க என்று பயந்தான் எனக்கு இருந்தது என அண்ணாமலை கூறுகிறார்.

அதைத் தொடர்ந்து முத்து ஓடி வந்து அப்பா எப்படி இருக்கு என நலம் விசாரிக்கிறார். பிறகு அண்ணாமலை மீனா குறித்து விசாரிக்க அப்படியே நைசாக பேச்சை மாற்றி வீட்டிற்கு அழைத்து வருகின்றனர்.

வீட்டிற்கு வந்ததும் பணத்துக்கு என்ன பண்ணுங்க என்று விசாரிக்க முத்து அதெல்லாம் விடுப்பா என்று சொல்ல விஜயா முத்து அவனோட காரை வித்துட்டான் என்று கூறுகிறார். பிறகு என் வீட்டு பத்திரத்தை வைக்க வேண்டியதுதானே என்று சொல்ல விஜயா அதுதான் அந்த மீனா தூக்கிட்டு ஓடிட்டா என்று சொல்ல நீங்க எல்லாரும் மீனாவை தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க, நான் பத்திரத்தை கொடுத்த அன்னைக்கே என்னை தனியா சந்திச்சு இது உங்க கிட்ட இல்லனா அத்தை கிட்ட தான் இருக்கணும் அதுதான் நியாயம் என்று சொல்லி திருப்பி கொடுத்துட்டா நம்ம பீரோல தான் இருக்கு என அண்ணாமலை உண்மையை உடைக்கிறார்.

அதைத்தொடர்ந்து மீனாவ வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்ல விஜயா அவன் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து தான் பிரச்சனையே ஆரம்பித்தது தந்திரம் போய் தொலையட்டும் என்று சொல்ல மீனா இந்த வீட்டை விட்டு போனதுக்கு பிறகு தான் நமக்கு பெரிய பிரச்சனையே வந்தது என அண்ணாமலை கூறுகிறார். மீனா வராமல் மாத்திரை போட மாட்டேன் சாப்பிட மாட்டேன் என உறுதியாக இருக்க முத்து வேறு வழி இல்லாமல் மீனாவை அழைக்க செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode update
Siragadikka aasai serial episode update