தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து வந்து பக்கத்தில் உட்கார்ந்து அத்தை ஏன் என்கிட்ட பேசவே இல்ல என்று கேட்டதும் இல்ல கிரிஷ் என்று ரோகினி பேச மனோஜ் ரோகிணி என்ன இது என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்க கடைசியில் அது கனவு என தெரிய வருகிறது.
அதன் பிறகு ரோகிணி கிருஷ் கிட்ட பேசவே இல்லையே எழுந்து ரூமுக்கு செல்ல தூக்கத்தில் பயப்படும் கிரிஷ்க்கு மீனா ஆறுதல் சொல்லி தூங்க வைக்கிறார். மறுநாள் காலையில் ரோகிணி வித்யாவுக்கு போனை போட்டு நடக்கும் விஷயங்களை சொல்ல அம்மாவையும் கிரிஷ்ஷையும் எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைக்கணும். இல்லன்னா நான் மாட்டிக்குவேன் என்று வித்யாவிற்கு ஒரு ஐடியா சொல்லி அதே மாதிரி செய் என்று கூறுகிறார்.
அதன் பிறகு மீனா கிரிஷ்க்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்க ரோகிணி அங்கு வந்து என்ன மீனா நீங்க பூ கொடுக்க போகலியா என்று பேச்சு கொடுக்க இல்லங்க கிரிஷ்ஷை பார்த்துக் கொள்ளுங்கள் அதனால போகல என்று சொல்கிறார். பிறகு மீனாவுக்கு வித்யா போன் போட்டு எங்க அப்பார்ட்மெண்ட்ல ஒரு போட்டி நடக்குது அதுல பூ கட்டுற போட்டிக்கு நான் பேர் கொடுத்திருக்கேன் ஆனா எனக்கு பூ கட்டவே தெரியாது. நீங்க சொல்லித் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் கொடுத்து இருக்கேன் என்று சொன்னதும் மீனா வீட்டுக்கு வர சொல்கிறார்.
ஆனால் வித்யா உங்க மாமியார் ஏதாவது சொல்வாங்க நீங்க எங்க வீட்டுக்கு வாங்க என்று கெஞ்சி மீனாவை சம்மதிக்க வைக்கிறார். அதன் பிறகு மீனா வித்யா வீட்டிற்கு கிளம்பிச் செல்ல தடுத்து நிறுத்தும் முத்து எங்க போற என்று கேட்க மீனா வித்யா வீட்டுக்கு போறதாக சொல்ல பார்லர் அம்மா பிரண்டு வீட்டுக்கு எனக்கு என்னமோ இது சரியா படலையே என்று சந்தேகப்படுகிறார். முத்து அதெல்லாம் நீ போக வேண்டாம் என்று தடுத்தும் மீனா நம்மள நம்பி பேர் கொடுத்திருக்காங்க அவங்கள ஏமாத்த கூடாது என்று சொல்லி கிளம்புகிறார்.
அடுத்ததாக ரவியும் ஸ்ருதியும் வேலைக்கு கிளம்ப ரோகிணி வீட்டுக்கு வந்தவங்கள வீட்டை விட்டு துரத்த ஒரு ஐடியா இருக்கு வீட்ல எல்லாரும் அவங்க அவங்க வேலையை பார்க்கவும் வெளியே கிளம்பிட்டா வந்த விருந்தாளி தானாக கிளம்பி போயிடுவாங்க. அந்த மாதிரி நீங்க மாமாவுக்கு கூட்டிட்டு எங்கயாச்சு போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வாங்க. அவங்கள கிளம்பி போயிட்டு வாங்க என்று ஐடியா சொல்லி அண்ணாமலையையும் விஜயாவையும் திருத்தணி கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார்.
விஜயா மனோஜ்க்காக வேண்டிக் கொண்டிருப்பதாக சொல்லி கோவிலுக்கு கிளம்ப முத்து ஏன் உள்ளூர் சாமி எல்லாம் அவனுக்கு காப்பாற்ற முடியாதுன்னு வெளியூர் சாமிகிட்ட வேண்டிக்கிட்டீங்களா என்று கலாய்க்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.