Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபத்தில் விஜயா, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் வாங்க வந்திருக்க இரண்டு காரை பார்த்து இரண்டுமே பிடித்திருக்கிறது என்று சொல்கிறார். எதை வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட உடனே மீனாவுக்கு போன் போட்டு கார் ஷோ ரூமுக்கு வர சொல்கிறார்.

மறுபக்கம் கோபமாக பார்வதி வீட்டுக்கு வந்த விஜயா அவ என்னையே எதிர்த்து பேசுறா என்று ஆவேசப்பட யாரு மீனாவா என்று பார்வதி கேட்க இல்ல கடைசியா வந்தாலே அந்த பணக்கார பைத்தியம் என்று ஸ்ருதியை பற்றி திட்டுகிறார். அவ என்ன பண்ணா நீ பணக்கார வீட்டு பொண்ணு என்று தலையில தூக்கி வச்சிட்டு தானே ஆடுற என்று கேள்வி கேட்க அதான் நான் பண்ண தப்பு. இந்த மீனாவோட சேர்ந்துக்கிட்டு என்னை எதிர்த்து பேசுறா.. மனோஜ்க்கு உங்க நகையை எடுத்துக் கொடுக்க வேண்டியது தானே என்று சொல்றா.. மீனா கிட்ட மன்னிப்பு கேட்க சொல்ற என்று புலம்புகிறாள். வீட்ல இருக்க பிரச்சனை எல்லாம் முடியட்டும் அந்த ஸ்ருதிய வைக்க வேண்டிய இடத்தில் வைக்கிறேன்.. இந்த விஜயா யாருனு காட்டுறேன் என்று வில்லியாக மாறுகிறார்.

அதன் பிறகு ஷோ ரூமுக்கு வந்த மீனா காரை பார்த்துவிட்டு இப்பொழுது கார் வேண்டுமா அத்தையும் மாமாவும் பேசாம இருக்காங்க இந்த நேரத்துல காரை வாங்கிட்டு கொண்டு போய் நிறுத்தினால் யாருக்கும் சந்தோஷம் இருக்காது. முதல்ல அவங்கள பேச வைப்போம் என்று சொல்ல முத்து நாம என்ன பண்ண முடியும் என்று கேள்வி கேட்க ஏதாவது பண்ணனும் என்று மீனா சொல்ல இதுக்கு ஒரே வழி தான் இருக்கு.. நீ வீட்டுக்கு போ நான் வந்துறேன் என கிளம்பி செல்கிறார்.

பிரசவ வலியில் துடிப்பது போல ஸ்ருதி டப்பிங் பேச இறுதியில் அதை ஃபீல் பண்ணி எமோஷனலாகி அம்மாவுக்கு போன் போட்டு என்னை பெத்துக்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டீர்களா என்று கேட்டு சாரி சொல்கிறாள். அதே பீலோடு வீட்டுக்கு வர மீனா மற்றும் ரோகிணி ஸ்ருதியை கூப்பிட்டு டீ கொடுக்க ஸ்ருதி டல்லாக இருப்பதை பார்த்து மீனா என்னாச்சு என்று கேட்க பிரசவ வலியில் துடிப்பது போல டப்பிங் பேசிய விஷயத்தை சொல்கிறார்.

ரோகிணி ஆமா குழந்தை பெத்துக்கிறது அவ்வளவு ஈஸி கிடையாது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமா வலி இருக்கும் என்று முதல் மாதத்தில் இருந்து பத்து மாசம் வரை நடப்பதை அப்படியே தன்னை மறந்து தனது அனுபவத்தை எடுத்து சொல்ல மீனாவும் ஸ்ருதியும் ரோகினியை சந்தேகப் பார்வையோடு பார்க்க ரோகினி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Siragadikka Aasai Serial episode update
Siragadikka Aasai Serial episode update