Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனோஜை அறைந்த பாட்டி, அதிர்ச்சியில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ரோகினி பிரசவம் குறித்து பேச மீனா என்ன நீங்க குழந்தை பெத்த மாதிரியே சொல்றீங்க என்று கேள்வி கேட்க என்னுடைய க்ளைண்ட்ஸ் இத பத்தி எல்லாம் பேசி இருக்காங்க அதனால எனக்கு தெரியும் என்று சமாளிக்கிறார்.

அதன் பிறகு சுருதி என்னால எல்லாம் இவ்வளவு வலியை தாங்கிகிட்டு குழந்தை பெத்துக்க முடியாது என்று சொல்ல ரவிக்கு ஆசை இருக்கும் இல்ல என்று ரோகிணி கேட்க அவனுக்கு ஆசை இருந்தா அவன் பெத்துக்கட்டும் என்று சொல்கிறார். மீனா தாய்மை பற்றி எடுத்து சொல்லியும் ஸ்ருதி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

அடுத்ததாக முத்து பாட்டியுடன் வீட்டுக்கு வர விஜயா என்று கூப்பிட்டதும் சோபாவில் உட்கார்ந்திருந்த விஜயா வாங்க அத்தை.. எப்ப வந்தீங்க? என்ன திடீர்னு கேள்வி கேட்க வரவேண்டிய வேலை வந்துடுச்சு அதான் வந்துட்டேன் என்று சொல்கிறார்.

நீ என்ன வேலை பண்ணியிருக்க என்று திட்டி அண்ணாமலை எங்கே என்று கேட்க மொட்டை மாடியில் இருப்பதாக சொல்ல போய் என் பையன கூப்பிடு என்று சொல்கிறார். விஜயா அப்படியே முழிக்க நானே போய் கூப்பிடுகிறேன் என்று அண்ணாமலையை கூப்பிட வருகிறார்.

பிறகு அண்ணாமலையிடம் 25 வயசு பையனா? பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டு பேசாம இருக்க என்று கேள்வி கேட்க அவ வர வர ரொம்ப மோசம் ஆகிட்டே போற என்று வருத்தப்பட அந்த புள்ள பாசத்துல தெரியாம இப்படி பண்ணிட்டா அவளை மன்னிச்சுடு அதுக்காக இப்படி பேசாம இருந்தா உன்னுடைய பிள்ளைகளும் உங்ககிட்ட இருந்து இதுதான் கட்டுப்பாங்க என்று அறிவுரை சொல்ல மீனா கிட்ட மன்னிப்பு கேட்டால் நான் அவளை மன்னிக்கிறேன் என்று அண்ணாமலை சொல்ல ஒருவேளை அப்படி நடந்தா அவ மீனாவ இன்னும் கொடுமை படுத்த ஆரம்பிச்சுருவா என்று பாட்டி சொல்கிறார்.

பிறகு அண்ணாமலையை கீழே கூட்டி வந்து விஜயாவை மன்னிப்பு கேட்க சொன்னதும் விஜயா அண்ணாமலையிடம் தெரியாமல் பண்ணிட்டேன் இனிமே இப்படி பண்ண மாட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார். எல்லாரும் முன்னாடியும் மன்னிப்பு கேட்க சொல்ல பிறகு எல்லோரும் வீட்டில் ஒன்று கூட விஜயா அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்கிறார்.

அடுத்து பாட்டி மனோஜை கூப்பிட்டு கன்னத்தில் பளார் என ஒரு அறை கொடுத்து எல்லாத்துக்கும் நீதான் காரணம் என்று திட்டுகிறார். ரோகினியை பிடித்து நீ அவனுக்கு புத்திமதி சொல்லி திருத்த மாட்டியா என்று டோஸ் விடுகிறார். இனிமேலாவது பொறுப்பா இருக்க சொல்லு என்று சொல்ல முத்து அவன் பொறுப்பா இருக்க ஒரு வழி இருக்கு அவன் மொத்தம் 29 லட்சம் தரணும் மாச மாசம் 50000 தர சொல்லுங்க என்று ஐடியா கொடுக்க ரோகினி, விஜயா, மனோஜ் அதிர்ச்சியாக மற்ற எல்லோரும் இது நல்ல ஐடியா என்று சொல்கின்றனர்.

பாட்டி மனோஜிடம் மாதம் மாதம் பணம் கொடுக்க சொல்ல அவன் கடையில நிறைய செலவிருக்கு மாசம் மாசம் கொடுக்க முடியாது என்று சொல்ல நீ சொன்னாதான் உன் பையன் கேட்பான் சொல்லு என்று விஜயாவை அதட்டி சொல்ல வைக்க விஜயாவும் அப்படியே சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Siragadikka Aasai Serial episode update
Siragadikka Aasai Serial episode update