Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனோஜ்க்கு காத்திருந்த அதிர்ச்சி, பிராங்க் பண்ண அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

மனோஜ் லெட்டரை படித்து கதி கலங்கி நின்றுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் விஜயா பார்வதி வீட்டுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வா என்று மீனாவிடம் சொல்ல முத்து அவளுக்கு வேலை இருக்கு என்று சொல்கிறார்.உடனே விஜயா வாக்குவாதத்தில் ஈடுபட அண்ணாமலை வருகிறார். என்ன பிரச்சனை என்று கேட்க சாப்பாடு எடுத்துட்டு வந்து குடு சொன்னா கொடுக்க முடியாதுன்னு சொல்றா,என்று சொல்ல சரி நான் எடுத்துக் கொண்டு வரேன் என்று அண்ணாமலை சொல்லுகிறார். ஆனால் மீனா நீங்க வேணா மாமா நானே எடுத்துட்டு போறேன் என்று மீனா சொல்ல கிளம்புகிறார் விஜயா.

மறுபக்கம் மனோஜின் கடையை தேடி வந்த ஒரு நபர் மனோஜிடம் லெட்டரை கொடுக்கிறார். அந்த லெட்டரில் from and to address எதுவுமே இல்லையே என்று மனோஜ் கேட்க ஃபிரம் நான் தான் டூ நீ தான் என்று சொல்கிறார். லெட்டரை பிரிச்சு படிச்சு பாரு என்று சொல்ல, கடையில் இருக்கும் அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர். நீங்க என்ன வேடிக்கை வேலைய பாருங்க என்று சொல்லி திரும்பி பார்த்தால் அந்த நபரை காணவில்லை. லெட்டரை படித்த மனோஜ் அதில் முதலில் உங்க அம்மாவுக்கு மாரடைப்பு வரும், தம்பி கொலைகாரன் ஆவான், நீ தற்கொலை செய்து கொள்வாய் என எழுதி உள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோஜ் அந்த ஆலை தேடி ஓடுகிறார்.

டீக்கடையில் அந்த ஆளைப் பார்த்த மனோஜ்,எதுக்கு இந்த லெட்டர் கொடுத்த என்று கேட்க, முதல்ல டீ காஸ் குடு சொல்றேன் என்று சொல்லுகிறார். காசு கொடுத்துவிட்டு வருவதற்குள் மறுபடியும் அந்த நபரை காணவில்லை. டீக்கடையில் இருந்து சிலர் அவர் ஜெயிலுக்கு போயிட்டு வந்தான் திருட்டுப் பையன் என்று சொல்ல உஷாராக இருக்குமாறு சொல்கின்றனர்.

மீனா அண்ணாமலைக்கும், ஸ்ருதிக்கும், சாப்பாடு போட்டு கொண்டு விஜயாவிற்கு எடுத்து வைக்கிறார். மீனா சுருதி இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க அண்ணாமலை உடனே விஜயா வந்து சாப்பிடு என்று குரல் கொடுக்க, இருவரும் சண்டை போடுகின்றனர். உடனே அண்ணாமலை சிரிக்க எங்களை பிராங்க் பண்ணீங்களா என்று கேட்கிறார். மீனா சாப்பாடு எடுத்துக் கொண்டு கிளம்ப, சுருதி அண்ணாமலை இடம் மீனா நம்பள எவ்ளோ கேரிங்கா பார்த்து இருக்காங்க ஆனா ஆன்ட்டி ஏன் புரிஞ்சிக்க மாட்டாங்க என்று சொல்ல ,அவளை என்னாலேயே இன்னும் புரிஞ்சிக்க முடியல என்று சொல்ல, நானா இருந்தா கடிச்சிடுவேன் என்று சொல்லுகிறார் சுருதி.

மீனா சாப்பாடு எடுத்துக்கொண்டு போகிறேன் அந்த நேரம் பார்த்து வயசானவர்கள் சாப்பாடு இல்லாமல் மயக்கத்தில் இருக்கிறார்கள். மீனா உடனே சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து அவர்களை சாப்பிட வைக்கிறார். சாப்பிட்டு அவர்கள் ரொம்ப நன்றி நாளைக்கு சாப்பிடாம இருந்திருந்தா இந்த பிளாட்பார்ம்ல இறந்து கிடந்திருப்போம், என்று ரொம்ப நன்றி என்று சொல்லுகின்றன. உங்களுக்கு நான் டெய்லியும் சாப்பாடு எடுத்துகிட்டு வரேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். உடனே விஜயா போன் போட்டு சாப்பாடு எங்கடி என்று கேட்க வந்துகிட்டு இருக்கு அத்தை என்று சொல்லி சமாளிக்கிறார்.

விஜயா என்ன சொல்ல போகிறார்?மீனா எப்படி சமாளிக்கிறார்.என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Siragadikka Aasai Serial episode update
Siragadikka Aasai Serial episode update