தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. ஒவ்வொரு நாளும் எதிர்பாராத ட்விஸ்ட்டுகளுடன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
குறிப்பாக முத்து மீனாவாக நடிக்கும் நடிகைகளின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வரும் இந்தத் தொடர் தற்போது இந்தியிலும் ரீமேக்காக உள்ளது.
இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வீடியோவில் அதே பூக்கடை அதே கார் ஆகிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.