தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மனோஜ் செய்த திருட்டு வேலை அம்பலமாகி அண்ணாமலை விஜயாவிடம் பேசாமல் இருக்க பாட்டியை வரவைத்து இருவரையும் சமாதானம் செய்து சேர்த்து வைத்த நிலையில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ரோகினி கிரிஷ் பிறந்த நாளுக்கு துணி எடுக்க கடைக்கு வந்திருக்க இதே கடைக்கு விஜயா மற்றும் பார்வதி பரதநாட்டிய துணி எடுக்க வருகின்றனர்.
ரோகினி ஒரு துணியை தேர்வு செய்து பேக் செய்ய சொல்ல விஜயா ரோகினியை பார்த்து ரோகிணி நீ என்னம்மா இங்க என்று கேட்க சேல்ஸ்மேன் இந்தாங்க மேடம் நீங்கள் கேட்ட துணி.. உங்க பையனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்லிக் கொடுக்க பையனா என்று விஜயா கேட்க ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.
ரோகிணி குறித்த உண்மை விஜயாவுக்கு தெரிய வருமா? அல்லது வழக்கம் போல ரோகிணி தப்பித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.