தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பார்வதி வீட்டுக்கு வந்த ரோகிணி இப்போதைக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு தோணுது என சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு காரணம் கேட்க ரோகிணி கல்யாணத்துக்கு முன்னாடி பியூட்டி பார்லர் ஆரம்பிச்சிடலாம்னு இருந்தேன். அதுக்காக லோனுக்கு ட்ரை பண்ணேன், லோன் கிடைக்கிற மாதிரி தான் இருந்தது ஆனா இப்ப கூப்பிட்டு எலிஜிபல் இல்லை என்று சொல்லிட்டாங்க. பணத்துக்கு ஏதாச்சு ப்ராப்பர்ட்டி இருந்தா அதோட டாக்குமெண்ட் கொடுக்க சொல்றாங்க. என்கிட்ட அப்படி எதுவும் இல்லை என சொல்ல விஜயா உங்க அப்பா கிட்ட கேட்க வேண்டியதுதானே என சொல்ல அவரோட பணம் எனக்கு தேவையில்லை நான் கேட்டா பத்து லட்சம் இல்ல 10 கோடி கூட கொடுப்பாரு ஆனா அது எனக்கு தேவையில்லை என சொல்கிறார் ரோகினி.
மேலும் அந்த பணத்தை ரெடி பண்ண எனக்கு குறைந்தது ஒரு ரெண்டு வருஷமாவது தேவைப்படும் அதுவரைக்கும் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என சொல்லி கிளம்ப விஜயா உனக்கு பணம் தானே வேணும் அதை எப்படியாவது ரெடி பண்ணிக்கலாம், ஆனா நீ தான் என் வீட்டு மருமகளா வரணும் என சொல்ல ரோகினி தனது திட்டம் சக்சஸ் ஆனது நினைத்து சந்தோஷப்படுகிறார்.
அதற்கு அடுத்ததாக விஜயா முத்துவை ஊருக்கு அனுப்பும் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருக்க அப்போது முத்து சாப்பிடுவதற்காக உட்கார ஒரு சவாரி வந்ததும் எழுந்து செல்கிறார்.
அண்ணாமலை நைட்டு கூட எதுக்கு சவாரிக்கு போற என கேட்க இப்போ காருக்கு ட்யூவ் கட்டணும், செயினை திருப்பி கொடுப்பதற்காக கடன் வாங்கினேன் அதுக்கு வேற பத்தாயிரம் தனியா கட்டணும் அதனால இப்படி சவாரிக்கு போனால் தான் சமாளிக்க முடியும் என்று சொல்கிறார்.
மேலும் மீனா செயினை கேட்டு நச்சரித்து கொண்டே இருந்ததாக சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. இதனால் அண்ணாமலை முத்துவை சவாரிக்கு அனுப்பி வைக்க மீனா ரூமுக்கு சென்றதும் விஜயா இவங்க இப்படியே எவ்வளவு நாளைக்கு சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்க, உங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சா அவங்க இவங்கள மாத்துறதுக்கு முயற்சி பண்ணுவாங்க என சொல்ல அண்ணாமலையும் நீ எதுக்காக சொல்றேன்னு எனக்கு நல்லாவே தெரியும் இருந்தாலும் நீ சொல்றது நல்ல ஐடியா தான் என சொல்லி அம்மாவிடம் பேச சொல்கிறார்.
மறுநாள் அண்ணாமலை பென்சன் பணத்தை ரிலீஸ் செய்யும் மேல் அதிகாரியை சென்று சந்திக்க அவர் மனைவி முத்து செய்த விஷயத்துக்காக அவர் என்னுடைய கணவர் காலில் வந்து விழுந்து மன்னிப்பு கேட்கணும் அப்படி செஞ்ச அடுத்த நிமிஷமே உங்களுக்கு பென்ஷன் பணம் வரும் இல்லனா வரவே வராது என சொல்ல அண்ணாமலை கோபப்படுகிறார்.
அந்த பணத்தை எப்படி வாங்கணும்னு எனக்கு தெரியும் அதுக்காக என்னுடைய புள்ள முத்துவ யார் காலிலும் விழ விட மாட்டேன் என சொல்கிறார். இதைக் கேட்ட மேல் அதிகாரி முத்து கால்ல விழுந்தால் தான் பணம் இல்லனா இந்த ஆயுசுக்கும் உங்களுடைய பென்ஷன் பணம் கிடைக்காது என சொல்லி அண்ணாமலையை வெளியே அனுப்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.