முத்துவின் வீடியோவை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் சிரிக்கின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் தீச்சட்டி எடுக்க ரெடியாகி நிற்கின்றனர். மனோஜ் இடுப்பில் வேப்பிலையை சுற்றிக்கொண்டு தீச்சிட்டியை வாங்கியவுடன் ஓடுகிறார் இதனைப் பார்த்த விஜய் இப்படி செய்வாங்க வேண்டிகிட்டு மூணு வாட்டி நடந்து போகணும் என்று சொல்லி வேண்டி முடித்தவுடன், மீண்டும் மனோஜ் வேகவேகமாக ஓட விஜயா நடந்து வருகிறார். அதே கோவிலுக்கு முத்துவும் மீனாவும் வந்து சாமி கும்பிட மீனா விஜயாவை பார்த்து விடுகிறார். உடனே முத்துவிடம் சொல்ல, எங்க அம்மா தான் இங்க என்ன பண்றாங்க என்று திரும்பி பார்க்கிறார்.
முத்து இதையெல்லாம் வீடியோ எடுக்க மீனா வேண்டாம் என்று சொல்லுகிறார் இன்னைக்கு வீட்ல ஒரு காமெடி இருக்கு என்று சொல்லி வீட்டுக்கு கிளம்பி வருகின்றனர். மனோஜ் சூடு தாங்க முடியவில்லை என்று கீழே வைக்கப் போக விஜயா உனக்கு வெறும் கம்பெனி மட்டும்தான் ஆனால் எனக்கு என்னோட உயிர் கீழ வைக்காம பத்திரமா வா என்று அழைத்துச் செல்கிறார். பிறகு வீட்டுக்கு வந்த முத்து அண்ணாமலையிடம் இன்னைக்கு நான் உனக்கு ஒரு வீடியோ காமிக்கிறேன்பா நீ ரொம்ப நாளுக்கு அப்புறம் நல்லா சிரிக்க போறேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து விஜயாவும் மனோஜ் வருகின்றனர். கோவில் வீடியோ என்று முத்து சொல்ல உடனே ரோகினி எதுக்கு தேவையில்லாமல் வேலை பார்த்துகிட்டு இருக்காரு முத்து என்று கேட்கிறார்.
உடனே முத்து அந்த வீடியோவை போட அதில் விஜயாவை பார்த்து அனைவரும் சிரிக்கின்றன. இருங்க இருங்க இதுக்கே சிரிச்சிட்டா எப்படின்னு ஹீரோவோட என்ட்ரி இருக்கு என்று சொல்லி மனோஜை காண்பித்தவுடன் குடும்பத்தினர் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர் சுருதி சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறார் இதனால் ரோகினி மற்றும் விஜயா டென்ஷனாகின்றனர். அண்ணாமலை எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க முட்டை வைத்த விஷயத்தையும் பரிகார செய்ய சொன்னதையும் அனைத்தையும் அண்ணாமலை இடம் சொல்லுகிறார் மனோஜ்.
மனோஜிடம் அண்ணாமலை நீ நல்லா படிச்சிருக்க செய்வினை, சூனியம் எல்லாம் மூடநம்பிக்கை தான் மூன்று முட்டைய வச்சு ஒருத்தரோட வாழ்க்கையை அழிச்சிட முடியுமா அப்ப நல்லவங்க இருக்கவே முடியாது. என்று சொல்ல என் உயிருக்கே ஆபத்து வரும் சொன்னாங்களே அதுக்கு தான் நாங்க பண்ணோம் என்று விஜயா சொல்லுகிறார். ஆனால் மனோஜ் எதற்கும் தயங்காமல் நாங்க பண்ணதுல எந்த தப்பும் கிடையாது சிரிக்கிறவங்க சிரிக்கட்டும் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல போக அந்த நேரம் பார்த்து மனோஜின் ஷோரூமில் வேலை செய்யும் நபர் வருகிறார். நீ எங்க இங்க வந்து இருக்க என்று கேட்க நீங்கதான் சார் ஷோரூம் சாவி வாங்க வர சொன்னிங்க என்று சொல்ல சரி ரோகிணி போ எடுத்துட்டு வா என்று சொல்லுகிறார். பிறகு அந்த முட்டை விஷயத்தை பற்றி ஆரம்பிக்க அதெல்லாம் ஒன்னும் பயப்பட தேவையில்ல நான் பரிகாரம் பண்ணிட்டேன் என்று மனோஜ் சொல்லுகிறார். உடனே அந்த நபர் முட்டையை யார் வச்சாங்கன்னு கண்டுபிடிச்சாச்சு சார் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
முட்டையை வைத்தது யார்? அதற்கு குடும்பத்தார் ரியாக்ஷன் என்ன?மனோஜ் என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.