தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து சுதாகரை அடித்து ஓடவிட்ட நிலையில் மீனா இப்பயாவது அவரைப் பற்றி புரிஞ்சிக்கிட்டியா என்று சொல்ல அவரது அம்மா ஆமாண்டி மாப்பிள்ளை பத்தி நான் தான் தப்பா நினைச்சுட்டேன் என்று கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து அண்ணாமலை பார்க்கில் வாக்கிங் சென்று கொண்டிருக்க அங்கு வரும் ஸ்ருதியின் அப்பா வாசுதேவன் ரவியை என் பொண்ணு கிட்ட பேச வேண்டாம் என்று சொல்லி வையுங்க என்று சொல்ல அண்ணாமலை என் பையன் அப்படிப்பட்டவன் கிடையாது என்று கூறுகிறார். ஆனால் ஸ்ருதியின் அம்மா சொத்தை வளைத்து போடுறதுக்காக இப்படி எல்லாம் செய்வதாக அவமானப்படுத்தி பேசுகிறார்.
அண்ணாமலை என்கிட்ட வந்து சொல்றத உங்க பொண்ணு கிட்ட போய் சொல்லுங்க, உங்க பொண்ணை என் பையன் கிட்ட பேச வேண்டாம் என்று சொல்லி நிறுத்துங்க என்று ஷாக் கொடுத்து அனுப்பி வைக்கிறார். அடுத்ததாக வீட்டுக்கு வரும் அண்ணாமலை ரவியிடம் அந்த பொண்ணோட சவகாசம் வேண்டாம் என கூறுகிறார். ரவி ஸ்ருதி நல்ல பொண்ணு என்று சொல்லியும் அண்ணாமலை நான் சொல்றது உனக்கு புரியும் என்று நினைக்கிறேன் என்று சொல்லி ரவியை அனுப்பி வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து முத்து மீனாவுடன் வீட்டுக்கு வர அதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார். ஆடி மாதம் இன்னும் முடியல அதுக்குள்ள எதுக்கு கூப்பிட்டு வந்த என்று கேட்க முத்து அப்படின்னா நீங்க ஆடி முடிங்க என்று நக்கல் அடிக்கிறார். அவள கூட்டிட்டு போய் விட்டு வர சொல்லுங்க என்று விஜயா சொல்ல அதெல்லாம் கூட்டிட்டு போக முடியாது என்று ஷாக் கொடுக்கிறார்.
பிறகு அண்ணாமலை இப்பதான் காலம் மாறி போச்சு, மனோஜ் ரோகினி இதே வீட்ல தானே தனித்தனியாக இருக்காங்க, அதே மாதிரி இவங்களும் இருக்கட்டும் என சொல்லி விஜயாவை ஆப் பண்ணுகிறார். பிறகு ரூமுக்குள் வந்த மீனா பார்த்தீங்களா எப்படி பேசுறாங்க , அதுக்கு தான் நான் வரலனு சொன்னேன் என்று சொல்ல அந்த சுதாகர் திரும்பவும் வீட்டுக்குள்ள வருவான், அதுக்காகத்தான் உன்னை கூட்டிட்டு வந்ததாக சொல்கிறார்.
அடுத்து வீட்டுக்கு மளிகை சாமான் வர முத்து பில் எவ்வளவு என்று கேட்க 7 ஆயிரம் ரூபாய்க்கு மேல் என்று சொல்ல ஷாக் ஆகிறார். ரோகிணிக்காக ஆலிவ் ஆயில், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவை கிலோ கணக்கில் வாங்கி இருக்க அதை பார்த்து ஷாக் ஆகும் முத்து மனோஜை வெளியே கூப்பிட்டு உன் பொண்டாட்டி ஆலிவ் ஆயில் தான் யூஸ் பண்ணுவாங்களோ என்று கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.