Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபத்தில் விஜயா ,முத்து கொடுத்த பதில் ,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka asai serial episode

மேளதாளத்துடன் வீட்டுக்கு வருகிறார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிறந்த ஜோடியாக முத்து ,மீனா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மேளதாளத்துடன் entry கொடுக்கிறார் முத்து. பிறகு முத்து மற்றும் அவரது நண்பர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடுகின்றன.ஸ்ருதியும் ,ரவியும் கூட சேர்ந்து வெஸ்டர்ன் வாசிங்க என்று சொல்லி அவர்களும் டான்ஸ் ஆட விஜயா கடுப்பாகிறார்.

விஜயா நைசாக கிளம்ப அண்ணாமலை நிறுத்தி ஆரத்தி எடுக்க சொல்கிறார். விஜயா ஸ்ருதியை எடுக்க சொல்ல நீங்க எடுங்க அதுதான் நல்லா இருக்கும் என்று சொல்கிறார். ஆரத்தி முடிந்த பிறகு மீனாவின் அம்மா கிளம்பி விட எல்லோரும் மேலே வருகின்றன. நீங்க ஏன் ஜெயிக்கலை என்று கேட்டதற்கு மனோஜ்,ரோகினி விளக்கம் கொடுக்கின்றன.

மீனாவும், முத்துவும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க விஜயா பழமொழி சொல்லி நக்கல் அடிக்கிறார். இத்தனை நாள் நாங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு இதுதான் சர்டிபிகேட் என்று முத்து பெருமையாக பேசுகிறார்.

முத்து அண்ணாமலை இடம் நான் இவ்வளவு காசு ஒரு நாள்ல சம்பாதிச்சது இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்க இது உங்கள் நேர்மைக்கான பரிசு என்று அண்ணாமலை சொல்கிறார்.

நான் ஜெயித்ததற்கு முக்கிய காரணம் மீனா மட்டும்தான், தூங்காம என்ன கேப்பாங்க என்று யோசித்து பேசிக் கொண்டிருந்தோம் என்று சொல்ல விஜயா ரோகினிடம் நீங்க நைட் எல்லாம் எதுவும் ரெடி ஆகலையா என்று கேட்க தூங்கி விட்டோம் என்று சொல்ல நல்லா தூங்குனீங்க என்று விஜயா சொல்கிறார்.

மனோஜ் படிப்பறிவு இல்லாதவர்களுக்கும் பொருத்தம் இல்லாதவர்களுக்கும் தான் இந்த பரிசை கொடுக்கிறார்கள் என்று நக்கலாக பேச முத்து படிப்பு தேவையில்லை மனசு பொருந்தி இருந்தால் போதும் என்று சொல்கிறார். அண்ணாமலை இடம் பணத்தை கொடுத்து சந்தோஷமாக பேசுகிறார் முத்து.

அண்ணாமலை முத்துவிடம் சொன்னது என்ன? விஜயாவிற்கு வரும் சந்தேகம் என்ன? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode
siragadikka asai serial episode