ரவி மற்றும் சுருதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஷோரூம் இல் இருந்து வந்த நபர் அது சாதாரண முட்டை என்று சொல்ல வீட்டில் இருப்பவர்கள் முன் மனோஜ் இன்னும் அசிங்கப்படுகிறார். விஜயா மனோஜை திட்டிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் மீனா பூ கொடுத்துக் கொண்டிருக்க அங்கு வந்த நபர் மீனாவிடம் முத்து சொன்னதை போல் சொல்லுகிறார் கடுப்பான மீனா முத்துவிற்கு போன் போட்டு ஒரு ஆல் என பாலோ பண்ணிக்கிட்டே இருக்கா என்று சொல்ல நீ பேப்பர் ஸ்ப்ரே வாங்கி வச்சுக்கோ இன்னொரு வாட்டி வந்து அடிச்சு விடு இன்னொரு வாட்டி இங்க நான் பார்த்தேன் நான் எனக்கு போன் பண்னு சொல்லி ஃபோனே வைக்கிறார்
ஸ்ருதி ரவியிடம் இன்னைக்கு டப்பிங் பேசுகிற ஹீரோயினோட பர்த்டே என்னை இன்வைட் பண்ணி இருக்காங்க நீயும் வரணும் என்று சொல்லி கூப்பிடுகிறார் ரவியும் வரேன் என சம்மதிக்க அந்த நேரம் பார்த்து நீத்து போன் பண்ணுகிறார். அவரும் ஈவினிங் வேலை இருக்கு கண்டிப்பா வரணும் என்று சொல்லிவிடுகிறார்.
பிறகு ஸ்ருதியிடம் எப்படி சொல்லி சமாளிப்பது என்று யோசித்து இந்த ஃபங்ஷனுக்கு நீ மட்டும் போயிட்டு வந்துரு ஸ்ருதி நான் இன்னொருவாட்டி கண்டிப்பா வரேன் அதுக்குள்ள முக்கியமான வேலை வந்துடுச்சு பேச, சுருதி கோபப்பட உடனே ரவியும் நான் வர வேலையை விட்டு தூக்கனாலும் பரவால்ல வேலை இல்லாம ஹோட்டல் ஹோட்டலா ஏறி இறங்கிட்டு இருக்கேன் என்றெல்லாம் கோபப்பட சூரியன் இப்படியெல்லாம் பேசிட்டு வர தேவையில்ல என்று சொல்லிவிடுகிறார். பிறகு ஃபங்ஷனில் கலந்துகொண்டு ஸ்ருதி கொஞ்ச நேரம் கழித்து நீத்து உடன் கேட்டரிங் ஃபுட் எடுத்துக்கொண்டு அதே ஃபங்ஷனுக்கு வருகிறார். ஸ்ருதி இதை பார்த்து அதிர்ச்சியாகி நிற்கிறார்.
உடனே அங்கிருந்து ஸ்ருதி வேகமாக கிளம்பி வெளியே வர ரவியும் வருகிறார் கோபமாக இருந்தால் ரவி சமாதானம் செய்ய முயற்சி செய்ய ஆனால் எவ்வளவு சொல்லியும் ஸ்ருதி சமாதானம் ஆகாமல் இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் ரவியிடம் உனக்கு யாருக்கு ஃபர்ஸ்ட் பிரயாரிட்டி கொடுக்கணுன்றதை உனக்கு தெரியல என்று சொல்ல நான் என்னோட ஓனருக்கு பிரியாரிட்டி கொடுக்கல என்னோட ஜாபுக்கு தான் கொடுக்கிறேன் என்று சொன்ன அப்ப போய் பரிமாறிட்டு நல்லா சாப்பிட்டு வா என்று சொல்லிவிட்டு கோபமாக ஸ்ருதி கிளம்பி விடுகிறார்.
பிறகு மீனா பார்வதியின் வீட்டிற்கு பூ கொடுக்க வர பார்வதி மனது கொஞ்ச நாளா கஷ்டமா இருக்குமா விஜயா என்கிட்ட பேசாம இருந்ததே கிடையாது ஆனா இப்போ ஒரு போன் கூட பண்றது இல்ல என்ன பண்றது முத்து அன்னைக்கு ரொம்ப வருத்தப்பட்டு பேசினா பார்த்ததே இல்ல அதனால நான் உண்மைய சொல்லிட்டேன் அதனாலதான் விஜயா என்கிட்ட பேசுறது கிடையாது. விஜயாவோட குணத்துக்கு வேற யாராவது இருந்தா எப்பயோ வெட்டி விட்டிருப்பாங்க ஆனா அண்ணாமலை அண்ணா அப்படி கிடையாது அவர் இப்ப வரைக்கும் பொறுத்துக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்காரு அவளுக்கு பெத்த புள்ளையே ஒரே மாதிரி பாக்க தெரியாது அப்புறம் எப்படி மருமகளை பாப்பா என்று எல்லாம் பேசுகிறார்.
பார்வதி பணம் விஷயம் குறித்து மீனாவிடம் சொல்ல அதற்கு மீனாவின் பதில் என்ன? சிக்குவாரா ரோகினி? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.