தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய சீரியல் எபிசோடில் விஜயாவின் நடன பள்ளியில் இருந்து காதல் ஜோடி வந்து சேர்ந்து விடுகின்றனர். இவர்களுக்கு பரதம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார். அந்தக் காதல் ஜோடிகள் விஜயாவிற்கு ஐஸ் வைக்க விஜயா ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
மறுபக்கம் சுருதியை சமாதானப்படுத்த ரவி ரெஸ்டாரண்டுக்கு கூப்பிடுகிறார். முதலில் வர மறுத்த சுருதி பிறகு ரெஸ்டாரண்டுக்கு கிளம்ப முடிவெடுக்கின்றனர். முத்து கிருஷ் பேச்சை எடுக்க அதற்குள் விஜயாவை நடனப் பள்ளியில் சேர்ந்த மாணவன் பைக்கில் வீட்டிற்கு கொண்டு வந்து விடுகிறார். இது மட்டும் இல்லாமல் விஜயாவின் பேக்கை மேலே எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிற மாஸ்டர் என்று சொல்லி ஐஸ் வைக்கிறார். விஜயா தன்னைப் பெரிய மாஸ்டர் என்ன குடும்பத்தாரிடம் பில்டப் கொடுத்து முத்துவிடம் பல்பு வாங்குகிறார்.
முத்து கிருஷ் விஷயத்தை அனைவரும் முன்னாலும் பேச தொடங்க அதனை படிக்கட்டில் ரோகினி ஒட்டு கேட்டு நிற்கிறார். முத்துவின் பேச்சை கேட்டு விஜயா எடுக்கப் போகும் முடிவு என்ன?ரோகினி என்ன சொல்லப் போகிறார்? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.