விஜயாவை உசுப்பேத்தி சிந்தாமணி பேச முத்து வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜின் பெயரை பச்சை குத்திக் கொண்டு வர மனோஜ் அனைவரையும் கூப்பிட்டு காட்டுகிறார். விஜயா பார்த்து பெருமை பட முத்து கிண்டல் அடிக்கிறார். ஆனால் மீனா இது எவ்வளவு பெரிய விஷயம் இதை பார்க்கும் போது எனக்கு உங்க பேர டாட்டூ போடணும்னு ஆசையா இருக்கு என்று சொல்ல முத்து உடனே தெய்வமே அதெல்லாம் வேணாம் பாசம் மனசுல இருந்தா போதும் என சொல்லி விடுகிறார். உடனே ஸ்ருதி ரோகினி கையை பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் கூட போறீங்களா என்று கேட்க நாளா போடமாட்டேன் வலிக்கும் என்று சொல்லிவிட்டு எனக்காக ரவி போடுவான் என்று சொல்ல உடனே ரவி உன் பேரை ஏற்கனவே ஹாட்ல பச்சை குத்தியிருக்கேன் என சொல்லி சமாளித்து விடுகிறார்.
பிறகு அவர்கள் அங்கிருந்து கிளம்ப மனோஜ் விஜயாவிடம் ரோகினிக்கு ஃபீவர் எதாவது வருமா பயமா இருக்குமா சாப்பாடு கொஞ்சம் மீனாவ எடுத்துட்டு வர சொல்லுங்க என்று சொல்ல முத்து கோபப்பட்டு உங்களுக்கு வேணும்னா வந்து எடுத்துட்டு போங்க அதுக்கு எதுக்கு மீனாவை எடுத்துட்டு வர சொல்றீங்க என்று சொல்ல, விஜயா நீங்க போங்க நான் எடுத்துட்டு வரேன் என்று சொல்லுகிறார். ரூமுக்கு சென்ற மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் சந்தோஷமாக பேசிக்கொள்கின்றனர். மனோஜ் ரோகினி இடம் நீ இவ்வளவு பாசமா இருப்பேன்னு நான் நினைக்கல ரோகினி என்று சொல்லி கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.
மறுநாள் காலையில் டான்ஸ் கிளாஸ்க்கு அனைவரும் வர சிந்தாமணியும் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார் பார்வதி அவரிடம் பேசிக்கொண்டிருக்க மாஸ்டர் பெரிய ஆள் என்று நினைத்தேன் ஆனா இவங்க ஒன்னும் பண்ணல என்று பேசிக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து விஜயா வருகிறார் விஜயா வந்து நிற்பது தெரிஞ்சும் சிந்தாமணி கால் மேல் கால் போட்டுக்கொண்டு திமிராக உட்கார்ந்து இருப்பதை பார்த்து விஜயா தண்ணி எடுத்துட்டு வா பார்வதி என்று சொல்லி கிச்சனுக்கு வந்து சிந்தாமணி நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி டென்ஷன் ஆகி பேசுகிறார். உடனே வெளியில் வந்து நீங்க போய் மேல ப்ராக்டிஸ் பண்ணுங்க நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் வேணாம் மாஸ்டர் நீங்க சொன்னத செஞ்சு காட்டுவீங்கன்னு பார்த்தா இப்படி பண்ணிட்டீங்க என்று கேட்க அதற்கு விஜயா நான் அவளை வீட்டை விட்டு வெளியே போகாம தான் பாத்துக்கிட்டேன். அவள் உட்கார்ந்து இடத்திலிருந்து செய்வான்னு எனக்கு எப்படி தெரியும் என்று சொல்லுகிறார்.
உடனே சிந்தாமணி விஜயாவிடம் உன் கொட்டத்தை அடக்கிடுவா போலையே ஏற்கனவே இப்போ கார் வர டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிச்சிருக்காங்க என்று சொல்ல உங்களுக்கு எப்படி தெரியும் என்று சிந்தாமணி இடம் விஜயா கேட்கிறார் அதுதான் பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காளே என்று சொல்ல அதற்கு விஜயாவும் அவள பூ கட்ட விடாம தடுக்கிற அவளை எந்த வேலை வெட்டியும் செய்யவிடாமல் வீட்ல உட்கார வைக்கிறேன் என்று சவால் விடுகிறார் சிந்தாமணியும் அதைக் கேட்டால் போல் விஜய்யாவை தூண்டி வெறுப்பேற்றுவிட விஜயாவும் மீனாவை எந்த வேலையும் செய்ய விடாமல் செய்கிறேன் என்று சொல்லி விட்டு வில்லத்தனமாக யோசிக்கிறார்.
மறுபக்கம் முத்துவும் மீனாவும் பவானியை அழைத்துக் கொண்டு பறந்து வீட்டிற்கு வருகின்றனர். வீட்டிற்குள் வர தயங்கிய பவானியை மீனா ஆறுதல் சொல்லி அழைத்து வருகிறார். பிறகு உள்ளே சென்றவுடன் பவானியில் அம்மா அழுது கொண்டே பவானியை அடிக்கின்றனர் அம்மா சமாதானமாக பவானி அப்பாவிடம் சாரிப்பா என்று சொல்ல அவரும் நாங்களும் உன் பக்கம் இருக்கிற நியாயத்தை தெரிஞ்சுக்கணும் நாங்களும் பேசி இருக்கணும் என்று சொல்லி விடுகிறார் உடனே முத்து அதுக்கப்புறம் என்ன கல்யாணம் வேலையை பாருங்க என்று சொல்ல பரசு எல்லாத்துக்கும் ரொம்ப நன்றிப்பா நீ இல்லன்னா எங்க குடும்ப மானமே போயிருக்கும் இதை நீ பக்குவமாக கையாண்டு இவ்வளவு தூரம் பண்ணி இருக்க என்று சொல்லுகிறார். எதுக்கு மாமா இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்ல பரசு ஒரு நல்ல நாளா பார்த்து வரேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார். நல்ல விஷயம்னா வரட்டும் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு முத்து உன் மீனாவும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.
அவர்கள் காரில் கிளம்பியவுடன் பின்னால் ஆட்டோவில் வந்து கறிக்கடைக்காரர் மணி இறங்குகிறார். அவர் உள்ளே வந்து பேசிவிட்டு பிறகு அடுத்த மாதம் ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கு அன்னைக்கு பேசி முடிச்சுக்கலாம்னு சொல்லி இருக்காங்க உங்க பிரண்டோட பையன் தான் பேசி என் மச்சான் மனச மாத்தி இருக்காரு என்று சொல்ல இப்பதான் பவானியை விட்டுட்டு போனாரு என்று சொல்ல அயோ அப்ப பார்த்திருக்கலாம் என்று மணி சொல்லுகிறார். போன் பண்ணி கூப்பிடவா என்று சொல்ல வேணாம் விடுங்க வேலையா இருப்பாங்க கல்யாணத்துல பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார். பொண்ணுக்கு என்னென்ன எல்லாம் செய்யணும்னு சொன்னீங்கன்னா நாங்க செஞ்சிடுவோம் என்று சொல்ல அது எதுவுமே வேணாம் என்று சொல்லுகிறார். நீங்க உங்க பொண்ணுக்கு போட வேண்டியது போடுங்க என்று சொல்ல அதற்கு பிரிட்ஜ் வாஷிங் மெஷின் எல்லாம் என்று கேட்க அதெல்லாம் என் மாப்பிள்ளைக்கு நான் செஞ்சுகிறேன் என்று மணி சொல்லுகிறார். பிறகு அவர்கள் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர்.
மீனா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க தும்மல் வந்து கொண்டே இருக்கிறது முத்து வர அவருக்குள் தும்மல் வந்து கொண்டே இருக்க இருவரும் தும்மி கொண்டே ஆளுக்கு வர விஜயா உட்கார்ந்து கொண்டிருக்கிறார். முத்து மீனா என்ன சொல்லுகின்றனர்? அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
