தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து 27 லட்சம் ரூபாய் பணம் கேட்க கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு பணம் வந்தாக வேண்டும் என சொல்கிறார். மேலும் மீனாவை என் தலைல கட்டி வச்சுட்டீங்க என திரும்பத் திரும்ப சொல்ல மீனா கடுப்பாகி உள்ளே செல்கிறார்.
அதன் பிறகு முத்து சாப்பிட வரும்போது மீனா முத்து பேசிய பேச்சால் கடுப்பாகி கோபமாக பேச முத்துவும் நீ ஓவரா பேசிக்கிட்டு இருக்க என்று சொல்ல மீனா கிச்சனுக்கு சென்று விடுகிறார். முத்து வெளியில் கோபமாக பேச பதிலுக்கு எதுவும் பேசாமல் மீனா அங்கிருந்து பாத்திரங்களை தூக்கி போடுகிறார்.
மறுநாள் ரோகிணி தன்னுடைய தோழியுடன் பியூட்டி பார்லர் ஆரம்பிப்பதற்காக ஒரு கடையை வாடகை கேட்டுச் செல்ல ஓனர் லேடீஸ்க்கு எல்லாம் கடை கொடுக்க முடியாது என்று சொல்ல கடுப்பாகும் ரோகிணி அவனோடு சண்டை போடுகிறார்.
இங்கே மீனா வீடு துடைத்துக் கொண்டிருக்கும் போது முத்து குடிக்க தண்ணீர் கேட்க கைக்கு எட்டுற தூரத்துல தான் இருக்கு எடுத்து குடிங்க அதுக்கப்புறம் அதுக்கு வேற கைல கட்டிட்டாங்க காலில் கட்டிட்டாங்கன்னு நீங்க ஏதாவது பேசுவீங்க எனக்கு எதுக்கு என சொல்ல அந்த சமயம் பார்த்து மனோஜ் டிப் டாப்பாக டிரஸ் செய்து கொண்டு வெளியே வர முத்து மனோஜை பார்த்து கடுப்பாகிறார்.
மனோஜின் சட்டையை பிடித்து என் பணத்தை எப்ப கொடுப்ப? ஒரு பொண்ணு ஏமாத்திட்டு போய் மூணு மாதம் கூட ஆகல அதுக்குள்ள இன்னொரு பொண்ணோட சிரிச்சு பேசிகிட்டு இருக்க உன்னால எப்படி முடியுது? இதுதான் உன் லவ்வா என கேள்வியுடன் பணத்தைக் கேட்டு நச்சரிக்கிறார்.
அதற்குள் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கூடிவிட விஜயா எதுக்கு நீ அவனிடம் சண்டைக்கு போயிட்டே இருக்க என கோபப்பட எனக்கு என் பணம் வந்தாகணும், என்னுடைய பணத்தை கொடுத்துட்டு அவன் கல்யாணம் பண்ணிக்கட்டும் இல்லனா அந்த பொண்ணு கிட்ட இவன் மணமேடையில் இருந்து ஓடிப்போன எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
பிறகு அண்ணாமலையும் அந்த பொண்ணு கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்றதுதான் நல்லது என சொல்ல விஜயா கடுப்பாக ரூமுக்குள் சென்று உட்கார அப்போது பார்வதி போன் செய்து ரோகினி உன்கிட்ட எதையோ பேசணும்னு சொல்றா, நீ வீட்டுக்கு வந்துடு, அவளும் இங்க வந்துருவா என்று சொல்கிறார்.
பிறகு விஜயா பார்வதி வீட்டுக்கு சென்று முத்து கெடு வைத்ததை சொல்லி பயப்படுகிறார். மீனாவும் முத்துவும் தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க அதையே காரணம் காட்டி அவங்கள உன் மாமியார் வீட்டுக்கு அனுப்பி வச்சிடு, மத்தத அப்புறம் பாத்துக்கலாம் என சொல்ல விஜயா இது நல்ல ஐடியா என சொல்கிறார்.
அதன் பிறகு வீட்டுக்கு வரும் ரோகிணி முகத்தை டல்லாக வைத்துக்கொண்டு எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்னு தோணுது என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.