Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்து சொன்ன வார்த்தை, கண்கலங்கிய சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikka asai serial today episode update 25-06-25

திருமணமான சந்தோஷத்தில் அருணும் சீதாவும் இருக்க, விஜயா ரோகினி இடம் கேள்வி கேட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹவுஸ் ஓனர் முத்துவிடம் இப்ப இருக்குற பொண்ணுங்க எல்லாம் காதலிக்கிறவங்களே கல்யாணம் பண்ணிக்கிறாங்க என்று சொல்ல யார் எப்படி வேணாலும் இருக்கலாம் ஆனா எங்க வீட்டு பொண்ணு அப்படி கிடையாது என்று சொல்லி சீதாவை கூப்பிட்டு நான் மாமா சொன்ன பையன் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லு சீதா என்று சொல்ல அவரால் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக அழுது கொண்டு சென்று விடுகிறார். பிறகு மீனா முத்துவை கூப்பிட்டு எதுக்கு இதெல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க வந்து சாப்பிடுங்க என்று சமாதானப்படுத்தி அனுப்பு வைக்க சீதாவிடம் வந்து ஆறுதல் சொல்ல சீதா கண்கலங்கி அழுகிறார் ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு என்று பேசுகிறார்.

ஒரு விஷயம் பண்றதுக்கு முன்னாடி யோசிக்கலாம் ஆனால் பண்ணதுக்கு அப்பறம் யோசிக்க கூடாது என்று சொல்லுகிறார். மறுபக்கம் ரோகினி சிட்டி இடம் சென்று நடந்த விஷயங்களை சொல்லி பணத்தைக் கேட்கிறார். நான் பிரச்சன தீர்த்து வைக்க தான் உன்கிட்ட இருந்து நகை வாங்கிட்டு போன ஆனா அதனால எனக்கு இன்னும் பிரச்சனை அதிகமாயிடுச்சு என் மாமியார் இப்பதான் என்கிட்ட அப்படியே பேச வந்தாங்க அதுக்குள்ள இந்த நகை பிரச்சனை வந்து திரும்பியும் என் மேல கோவமாயிட்டாங்க தயவுசெய்து அந்த பணத்தை கொடுத்துட்டு என்று சொல்லுகிறார்.

நகையை எடுத்துட்டு வந்தா பணத்தை கொடுத்துறேன் என்று சொல்ல நகை நகையோட சொந்தக்காரங்க கிட்ட போயிடுச்சு இப்ப நான் போய் கொடுக்க முடியும் என்று சொல்ல, அப்ப எனக்கு ஒரு லட்சம் நஷ்டம் ஆகும் என்று சிட்டி சொல்லுகிறார். அப்போ கொடுக்க முடியாது இல்ல உன்ன நம்பி வந்தது என்னோட தப்பு தான் என்று சொல்லிவிட்டு கோபமாக சென்று விடுகிறார். உடனே வெளியில் வந்து யோசித்து முருகனிடம் கேட்கலாம் என முடிவெடுத்து போன் பண்ணி கேட்க நான் கொஞ்சம் வெளியே வந்து இருக்கேன் என அவர் போனை வைத்து விடுகிறார். மீனா போனில் அருண் சீதா திருமண புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார் முத்து தண்ணீர் கேட்கிறார். போனை வைத்துவிட்டு தண்ணீர் எடுக்கப் போக அதற்குள் மீனா சீதாவின் போனை எடுக்க உடனே வேகமாக வந்து புடுங்கி விடுகிறார்.எதுக்கு அடுத்தவங்க போன் எடுத்து பாக்குறீங்க என்று கேள்வி கேட்க என்ன ஆயிடுச்சு என்று கேட்கிறார்.

ஏதாவது தப்பு பண்ணா தான் பயப்படுவாங்க நீ எதுக்கு பயப்படுற என்று கேட்க அப்ப என் மேல சந்தேகப்படுறீங்களா என்று கேட்க அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லுகிறார். பிறகு இருவரும் படுத்துவிட மனதுக்குள் சீதாவின் திருமணம் குறித்து நினைத்துக்கொண்டு இருவரும் எழுந்து உட்கார்ந்து பேசுகின்றனர். மீனா சீதா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு தான் நானும் நினைக்கிறேன் என்று சொல்ல அதையே தான் மீனா நான் சொல்ற அவ அருண கல்யாணம் பண்ணிக்கிட்டா நிம்மதியா இருக்கமாட்டா என்று அதே விஷயத்தை சொல்லுகிறார். உங்ககிட்ட எல்லாம் பேசறது வேஸ்ட் என்று எல்லாம் மீண்டும் படுத்து விடுகிறார்.

சீதா திருமணம் நடந்ததை நினைத்து பார்க்க அருணும் நினைத்து பார்த்து சந்தோஷப்படுகிறார். பிறகு அருண் போனில் பாட்டு வைத்துவிட்டு சந்தோஷமாக தூங்க முடியாமல் இருக்க சீதாவும் வெக்கப்பட்டு சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

ரோகினி கட்டிலில் வந்து உட்கார மனோஜ் இப்ப எதுக்கு இங்க வந்து உட்கார என்று கேட்கிறார் இப்ப என்ன பண்ணனும் என்று கேட்க அம்மா தான் பணம் கொடுக்கிற வரைக்கும் மேல படுக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இல்ல என்று சொல்ல ரோகிணி எது கேட்டாலும் அம்மா அம்மானு சொல்லாத மனோஜ் பெட்ரூமுக்குள்ள என்ன நடக்கணும்னு கூட உங்க அம்மா தான் முடிவு பண்ணுவாங்களா நான் ஒன்னும் தெரிஞ்சே அந்த நகையை வாங்கிட்டு வந்து கொடுக்கல அவங்க நகை குடுத்தா சந்தோஷப்படுவாங்கன்னு தான் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். அது திருட்டு நிறைய இருந்து அது என் மேல தப்பா ஆயிடுச்சு என்று கோபப்படுகிறார். ரோகிணி என்ன சொல்லுகிறார்? அதற்கு மனோஜ் பதில் என்ன? விஜயா என்ன கேட்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்க்கணும் தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 25-06-25
siragadikka asai serial today episode update 25-06-25