அண்ணாமலை மீனா மீது கோபப்பட கண்கலங்கி உள்ளார் மீனா.
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சுருதி இடம் உதவி கேட்க ஸ்ருதி அப்பா அம்மாவிற்கு ஃபோன் போட்டு முத்துவிற்காக உதவி கேட்கிறார் ஆனால் அவர்கள் உதவி செய்ய மறுத்து இதனால் ஒரு பிரச்சனையை ஒன்று செய்ய வேண்டும் என பிளான் பண்ணுகின்றனர். ஸ்ருதி மீனாவுக்கு போன் செய்து நான் ட்ரை பண்ண மீனா ஆனா அவங்க ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல சரி சுருதி நான் வைக்கிறேன் என்று ஃபோனை வைத்துவிட்டு முத்துவிடம் வருகிறார். நான் எல்லா இடத்திலும் ட்ரை பண்ணிட்டேன் எப்படி வெளிய எடுக்கிறது என்று தெரியவில்லை சுருதி கிட்ட சொல்லியும் எடுக்கவில்லை என்று சொல்ல அவங்க எப்படி எடுப்பாங்க அவங்க அப்பாவ தான் அடிச்சிருக்கேன் அவங்ககிட்ட எதுக்கு சொன்ன என்று மீனாவை கேட்கிறார். நான் உங்களை இங்கு விட்டுட்டு போக மாட்டேன் என்று சொல்லிவிட்டு அழ சத்யாவிடம் கூட்டி போய் உங்க அக்காவ வீட்டுல விட்டுட்டு போ என்று சொல்ல சரியென்று சொல்லிவிட்டு வீட்டில் எங்கே என்று கேட்டால் எல்லாரும் கேட்க மாட்டாங்க அப்பா கேப்பாரு சவாரிக்கு போறேன்னு சொல்லு என்று சொல்லுகிறார்.
வீட்டுக்கு வந்த மீனாவிடம் விஜயா நில்லு என்று சொல்லி நிற்க வைத்து எங்க போயிருந்த என்று கேட்க பூ கட்டிட்டு இருந்தேன் என்று பொய் சொல்ல முத்து எங்க என்று கேட்கிறார் சவாரிக்கு போயிருக்காரு என்று சொல்ல சவாரி என்ன ஜெயில்லையா? நீ என்ன ஜெயில்லையா பூ கட்டிக்கிட்டு இருந்த என்று கேள்வி கேட்க மீனா அதிர்ச்சி அடைகிறார். மேலும் அண்ணாமலை இடம் பார்த்தீங்களா பொய்யே சொல்ல மாட்டான்னு சொன்னீங்க எப்படி அடுக்கடுக்கா சொல்லிக்கிட்டு இருக்கா என்று சொல்ல வீட்டில் இருக்கும் அனைவரும் வந்து விடுகின்றனர் எங்களுக்கு எப்படி உண்மை தெரியும் தானே பாக்குற ஸ்ருதியோட அம்மா வந்து எல்லாம் உண்மையை சொல்லிட்டாங்க என்று சொல்லுகின்ற. உடனே மனோஜ் நம்மளுக்கு உண்மை தெரியலைன்னா இவங்க சொல்றதுதான் நம்பிகிட்டு இருப்போமா என்று இன்னும் ஏற்றி விடுகிறார். நடந்த விஷயங்களை அண்ணாமலை கேட்க உண்மையை மீனா சொல்லி விடுகிறார். விஜயா உங்களால இன்னும் எவ்வளவு தான் அசிங்கப்படணும்னு தெரியல என்று சொல்ல,நல்லது பண்ணனும் நினைச்சது தப்பு இல்ல அது இந்த மாதிரி வழியில் பண்ணும் என்ன அவசியம் வந்தது என்று மீனாவிடம் கேட்கிறார். எனக்கு விஷயம் தெரிஞ்ச பிறகு பரசு உடன் சென்று பேசி பார்த்தேன் முடியாதுன்னு சொல்லிட்டாங்க என்று சொல்லுகிறார்.
இவ தம்பி ஊர் சுத்திட்டு படிக்காம போனதுக்கு இவன் போய் ஜெயில்ல உட்கார்ந்துகிட்டு இருக்கான் இவ குடும்பத்துக்காக தான் போய் உட்கார்ந்துகிட்டு இருக்கான் என்று விஜயா சொல்ல அண்ணாமலை மீனாவிடம் அவன் எப்பவுமே இந்த மாதிரி தான் யோசிப்பான் ஆனால் நீ பண்ணது எனக்கு உடன்பாடு இல்லம்மா நீ நிதானமான பொண்ணு தானே என்கிட்ட சொல்லி இருந்தா நான் வந்து பேசி இருப்பேன் அந்த காலேஜ்ல இல்ல வேற யாரையாவது வச்சு பேசி இருக்கலாம். உங்க குடும்பத்து மேல எனக்கு அக்கறை இல்லையா. இதுவும் நீங்க பிரின்ஸ்பல் ஏமாத்துற மாதிரி தானே, நீ இப்படி செய்வேன்னு நான் நினைக்கல என்று மீனாவிடம் கேள்வி கேட்டு விட்டு சென்று விடுகிறார். விஜயா ஆச்சரியப்பட்டு மனோஜை கூப்பிட்டு முதல் முறையா உங்க அப்பா இவள இவ செஞ்ச விஷயம் தப்புன்னு சொல்லி திட்டிட்டு போறாரு பார்க்கவே ஆச்சரியமா இருக்கு என்று சொல்லிவிட்டு அனைவரும் கிளம்புங்க என்று சொல்லுகிறார் மீனாவை கூப்பிட்டு இவ்வளவு நாளா நீ செஞ்சது தப்பு இல்லன்னு சொன்னவரே இன்னிக்கி தப்புன்னு சொல்லி இருக்காரு இப்பதான் உன்னோட முகம் அவருக்கு தெரிஞ்சிருக்கு என்று சொல்ல மீனா அழுது கொண்டிருக்கிறார்.
மறுநாள் காலையில் மீனா போலீஸ் ஸ்டேஷனுக்கு வர அங்கு சத்யாவும் சீதாவும் நிற்கின்றனர் அம்மாவுக்கு விஷயம் சொல்லிட்டீங்களா என்று சொல்ல இவன் எக்ஸாம் எழுத கூடாதுன்னு சொன்ன விஷயத்தை அம்மாகிட்ட சொல்லல அவங்க கடைக்கு போனாங்க நாங்க இப்படி வந்துட்டோம் என்று சொல்ல உடனே ஒரு போலீஸ்காரரிடம் எஸ்ஐ வந்துட்டாங்களா என்று கேட்க வந்துட்டாங்க உள்ள இருக்காங்க போய் பாருங்க என்று சொல்ல மீனாவும் போய் நடந்த விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்கிறார் பிறகு முத்துவை ரிலீஸ் செய்ய மீனா அழுது கொண்டே கட்டிப்பிடிக்கிறார். இது மாதிரி தப்பு இனிமேல் பண்ணாதீங்க என்று முத்துவிடம் கையெழுத்து வாங்கி அனுப்பி வைக்கின்றனர்.
முத்து வெளியே வந்தவுடன் என்ன சொல்லுகிறார்? அதற்கு சத்யாவின் பதில் என்ன? மீனா என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.