Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருண் அம்மா எடுத்த முடிவு.. சீதா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 02-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜை வெறுப்பேத்த மகேஷ் என்பவருடன் பேசுவது போல வெளியில் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க மனோஜ் இதனை மறைந்திருந்து கேட்டுவிட்டு கடுப்பாகி நிற்கிறார் பிறகு ரோகிணி வந்து படுத்தவுடன் மனோஜ் ரோகினியின் போனிலிருந்து அந்த நம்பரை எடுத்துக் கொள்கிறார். யார் அந்த மகேஷ் என்று கண்டுபிடிக்கிறேன்னு நினைத்து விட்டு படுத்து விடுகிறார்.

மறுநாள் காலையில் நீத்து வீட்டுக்கு வர மீனா அண்ணாமலை இடம் ரவி வேலை செய்ற ஹோட்டலுடன் ஓனர் என்று சொல்ல குடும்பத்தினர் அவர்களை வரவேற்று வரவேற்கின்றனர் என்ன விஷயம் என்று கேட்க நீத்து விஜயா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு உட்காருகிறார். நான் இன்னும் நாலு ஹோட்டல் ஆரம்பித்து நான் இருக்கேன் அதுக்கு ரவியை பிசினஸ் பார்ட்னரா சேர்த்துக்கப் போறேன் என்று சொல்லுகிறார். உடனே விஜயா மனோஜிடம் என்னடா சொல்றாங்க என்று கேட்க அவங்களோட பிசினஸ்ல ரவியை சேர்த்துக்க போறாங்களாம் என்று சொல்ல குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர்.

உடனே ஸ்ருதி மொத்த சக்சஸும் உங்களால மட்டும் தான் ஆச்சு ரவி உங்களுக்கு எதுவுமே பண்ணல அப்புறம் எதுக்கு ரவிய பார்ட்னரா கேக்குறீங்க என்று கேட்க தப்பா நினைச்சுக்காதீங்க சுருதி அன்னைக்கு ஒருத்தரால மட்டும் எல்லா ஆகிடும்னு சொன்னதுனால தான் எனக்கு டென்ஷன் ஆச்சு அதுக்கு மன்னிச்சிடுங்க ரவி என்று சொல்ல சுருதி பேசினதுக்கு மன்னிச்சிடுங்க நீத்து என்று சொல்லுகிறார். உடனே முத்து இப்படி தான் சொல்லுவாங்க ஆனா ஒரு வேலையை மட்டும் வாங்கிட்டு வாங்க என்று சொல்ல மத்தவங்க மாதிரி தான் இருக்க மாட்டாங்க அதனால தான் டாக்குமெண்ட் எடுத்துட்டு வந்து இருக்கேன் என்று சொல்லி அண்ணாமலையிடம் இதை நீங்களே ரவி கிட்ட குடுங்க என்று சொல்ல அண்ணாமலை இதுக்கு மேல ரவி விஷயத்தில் இருந்து முடிவு எடுத்தாலும் ஸ்ருதி தான் எடுக்கணும் என்று சொன்னவுடன் தேங்க்ஸ் அங்கிள் என்று ஸ்ருதி சொல்லிவிட்டு ரவியை ரூமுக்குள் அழைத்துச் சென்று அன்னைக்கு நான் பேசிட்டேன்னு நீ கோபப்பட்ட அன்னைக்கு நான் பேசுவதுனால தான் இன்னிக்கு இது நடந்திருக்கு என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் விஜயா நீத்துவிடம் ரெஸ்டாரன்ட் திறக்க போறேன்னு சொல்ற எவ்வளவு ஆகும் என்று கேட்க மனோஜ் ஒரு ரெண்டு மூணு கோடி ஆகும் என்று சொல்லுகிறார் ஆனால் நீ நாலு ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ண போறேன் இல்ல ஒரு 20 கோடி ஆகும் என்று சொன்னவுடன் மனோஜ் விஜயா இருவரும் வாயை பிளக்கின்றன. 20 கோடியா உனக்கு யாருமா கொடுப்பா என்று சொல்ல என் டாடி நாளைக்கு சொன்னாலும் எனக்கு இது குடுத்துருவாரு நாங்க ஏற்கனவே நிறைய ஹோட்டல் வைத்திருக்கும் இன்னும் நூறு ஹோட்டல் வைக்கணும்னு தான் என்னோட ட்ரீம் என்று சொல்ல விஜயா ஏற்கனவே சுருதி பணக்காரியா இருக்கா இல்ல இவ அவளை விட பணக்காரியா இருக்கா செம இந்த பாலில் காரிய வெட்டிவிட்டு மனோஜ்க்கு இவள கட்டிவச்சா எப்படி இருக்கும் என்று யோசித்து மனோஜ் நீத்து இது வரும் திருமண கோலத்தில் இருப்பது போல நினைத்துப் பார்க்கிறார். கொஞ்ச நேரத்தில் வெளியே வந்த ரவி ஸ்ரீ சம்மதம் என தெரிவித்து கையெழுத்து போட நீத்து கிளம்ப போக அடிக்கடி வாமா உனக்கு இருக்கிற டேலண்டுக்கு நீ நல்ல படிச்ச பிசினஸ் ஐடியா உள்ள பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்ல கிடைச்சா பார்க்கலாம் ஆன்டி என்று சொல்லிவிட்டு நீத்து சென்று விடுகிறார். முத்து ரவியிடம் இதில் உனக்கு இஷ்டமடா என்று கேட்க கொஞ்ச நாளா என் இஷ்டமா எதுவுமே நடக்கல என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் சந்திரா கோவிலுக்கு கிளம்ப சத்யாவிடம் சாப்பிட்டு சீதாவையும் சாப்பிட சொல்லு என்று சொன்ன அவ எங்கம்மா சாப்பிடுற அவளை யார் புரிஞ்சிக்கிறீங்க அவ மனசு யாருன்னு புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க சீதாவை பார்க்கவே கஷ்டமா இருக்கு என்று சொல்ல மாப்பிள்ளை எல்லாத்தையும் சரி பண்ணிடுவாரு என்று சொல்லுகிறார். பிறகு கொஞ்ச நேரத்தில் மீனா வந்தவுடன் சீதாவிடம் நீ அவசரப்பட்டு இப்படி போய் பேசிட்டு வந்தேன் என்று கேட்க சந்திரா, அதுல என்ன தப்பு இருக்கு அவருக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகும் மாப்பிள்ளை வரன் பாத்துக்கிட்டு இருக்காரே என்று சொல்லுகிறார். அதற்கு மீனாவின் பதில் என்ன?அருண் அம்மா சந்திரா வீட்டுக்கு வந்து என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 02-06-25