Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனோஜ்க்கு வந்த சந்தேகம், முடிவில் உறுதியாக இருக்கும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 03-06-25

விஜயா முடிவு ஒன்று எடுக்க, மீனாவிடம் முத்து கோபப்பட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருணின் அம்மா மீனாவிடம் என் பையன் ரொம்ப நல்லவமா என் பையனுக்கு பொண்ணு பார்த்தா எத்தனை பொண்ணுங்க கிடைப்பாங்க ஆனா சீதா மாதிரி பொண்ணு கிடைக்க மாட்டா இந்த ஜென்மத்துல சீதா தான் எங்களோட மருமக உன் புருஷன் கிட்ட கொஞ்சம் பேசி பாருங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.மறுபக்கம் மனோஜ் ரோகினியை நினைத்து கடையில் சோகமாக உட்கார அவரது நண்பர் வருகிறார் அவரிடம் நீ சொன்னதெல்லாம் நடந்துரும்னு பயமா இருக்கு ப்ரோ என்று சொல்லுகிறார் நான் என்ன சொல்லணும் ப்ரோ இப்பதான் வந்தேன் என்று சொல்ல ரோகிணி மகேஷ் என்பவருடன் பேசும் விஷயத்தை சொல்லுகிறார்.

நீ பேசலனா வேற என்ன பண்ணுவாங்க என்று சொல்ல எனக்கு ரொம்ப பயமா இருக்கு ப்ரோ என்று சொல்லுகிறார்.சரி வா வெளியே போய் பேசலாம் என்று முடிவெடுத்து வர மனோஜ் அவரிடம் மகேஷிடம் பேச சொல்ல நீ பேசு உனக்கு தானே சந்தேகம் என்ன எதுக்கு பேச சொல்றேன் அவரே வலு கட்டாயமாக பேச சொல்லுகிறார் பிறகு போன் போட்டு எடுக்க நீங்கள் யார் என்று கேட்கிறார்கள். போன் போட்டது நீங்க என்னை யார் கேக்குறீங்க என்று சொல்ல உங்க பேர் என்னன்னு சொல்லுங்க என்ற மனோஜ் பிரண்டு கேட்க மகேஷ் என்று சொன்னவுடன் போனை கட் பண்ணி விடுகின்றனர். சந்தேகம் தீர்ந்துடுச்சு கண்டிப்பா அந்த மகேஷ் தான் என்று சொல்ல நீ இதே மாதிரி இருந்த நான் நாளைக்கு என்ன வேணாலும் நடக்கலாம் அதனால என் வைஃப் கிட்ட பேசு என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஒரு பிச்சைக்காரன் பொண்டாட்டிய என்னை ஏமாத்திட்டு போய்ட்டா அதனாலதான் நான் பிச்சை எடுக்கிறேன் என்று சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். அதற்கு அந்த நண்பர் ஒழுங்கா போய் பேசு இல்ல மகேஷா? மனோஜானு? பட்டிமன்றம் வைக்கிற மாதிரியா ஆயிடும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் ரோகிணி மகேஸ்வரிக்கு போன் போட்டு என்னடி புல்லா பெயர் சொல்றேன் என்று கேட்க மனோஜ் இல்ல அதனால தான் என்று சொல்லுகிறார் நீ சொன்ன மாதிரியே மனோஜ் எனக்கு போன் பண்ணாரு உடனே நான் ஹஸ்பண்ட் கிட்ட கொடுத்து மகேஷ் பேசுறதா சொல்ல சொல்லிட்டேன் என்று சொல்லுகிறார். எனக்கு தெரியும்டி மனோஜ்க்கு பொசசிவ்னஸ் அதிகம் அதனால் தான் நான் அப்படி பண்ண சொன்னேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் மனோஜ் வந்தவுடன் உடனே மாற்றிப் பேசுகிறார்.அதற்கு மனோஜ் ரோகினி யார்கிட்ட பேசிகிட்டு இருக்க என்று சொல்ல போனை ரோகினி வைத்தவுடன் என் பிரண்டு கிட்ட பேசிகிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். யாரு எனக்காக டைம் ஸ்பென்ட் பண்றாங்களோ அவங்க கிட்ட தானே பேச முடியும் என்று சொல்லிவிட்டு எனக்கு பேசி பேசி தொண்டையில் டிரை ஆயிடுச்சு நான் போய் தண்ணி குடிக்கிறேன் என சென்று விடுகிறார்.

மறுபக்கம் விஜயா பார்வதியை சந்தித்து மனோஜ்க்கு நீத்துவை திருமணம் செய்து வைக்கப் போகும் விஷயத்தை சொல்ல பார்வதி வாயடைத்து போகிறார் என்ன ஆச்சு உனக்கு என்று சொல்ல, இதெல்லாம் எப்படி பண்ண முடியும் அதுவும் இல்லாம ரோகிணி கம்ப்ளைன்ட் பண்ண உன்னை ஜெயில்ல போட்டுருவாங்க என்று சொல்ல எல்லாமே நான் முறையோடு தான் பண்ண போற முதல்ல ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் வாங்கி கொடுத்துட்டு அதுக்கப்புறம் தான் நீத்துவை கல்யாணம் பண்ணி வைப்பேன் அதுவும் இல்லாம அதுக்குள்ள நீ நீத்துவ நான் பேசி சம்மதம் வாங்கிடுவேன் என்று சொல்ல மனோஜ் சம்மதிப்பானா என்று கேட்க அவன்கிட்ட நான் பேசிடுவேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் மீனா வீட்டில் பூ கட்டிக்கொண்டு இருக்க முத்து வந்தவுடன் சீதா விஷயம் பற்றி பேசுகிறார். அருண் அம்மா வந்த விஷயத்தையும் சொல்ல உங்களுக்கு சீதா மேல எந்த அக்கறையும் இல்லை அவளை பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா அவ உங்களுக்காக இந்த கல்யாணத்தையே வேண்டான்னு சொல்லி இருக்கா. ஆனா நீங்க அவளுக்காக இது பண்ண கூடாதா என்று சொல்ல முத்து கோபப்படுகிறார்.ஒரு வேலை உங்களை மீறி கல்யாணம் நடந்தால் என்ன பண்ணுவீங்க என்று கேட்க முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? ரோகினி இடம் மனோஜ் என்ன கேட்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 03-06-25

SiragadikkaAasai Serial Episode Update 03-06-25