Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரோகிணி அம்மா சொன்ன விஷயம்,கோபப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

SiragadikkaAasai Serial Episode Update 07-05-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா மீனாவிடம் பேசி விட்டு வேலைக்கு கிளம்ப சந்திரா வருகிறார் சீதா எப்பவுமே பொறுப்பா இருக்கா இல்லம்மா என்று சொல்ல, அவ சின்ன வயசுல இருந்தே பொறுப்பா தான் இருக்கா உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்ச மாதிரி அவ்வளவு கிடைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று சொல்ல எல்லாமே சீக்கிரம் நடக்குமா நான் சாமி கும்பிட்டு கிளம்புறேன் என சொல்ல உள்ள இன்னொரு மாலை கேட்டாங்க கொடுத்துட்டுபோ என்று சொல்ல மீனாவும் உள்ளே வர வாசலில் கால் தடுக்கிறது.

இதை ஒரு பெண் சாமியார் கவனிக்கிறார். பிறகு ஐயரிடம் மாலையை கொடுத்துவிட்டு மீனா திரும்பி வரும்போது அவர் மீனாவை கூப்பிடுகிறார். மீனா வந்து நின்றவுடன் என்னம்மா ஏதாவது சாப்பிடறீங்களா எப்படி இருக்கீங்க என்று கேட்டு நலம் விசாரிக்க நான் முன்னாடி எல்லாம் அருள்வாக்கு சொல்லிக்கிட்டு இருந்தேன் இப்போ கோவிலில் போய் உட்கார்ந்து அமைதியா வந்துருவேன் அந்த அம்மா உன்ன பார்க்கும்போது அந்த அம்மா என் மனசுல ஒரு விஷயத்தை சொல்லி இருக்கா அதை சொல்ல தான் நான் கூப்பிட்டேன் என சொல்லி உன் புருஷனுக்கு நேரம் சரியில்ல ஒரு பிரச்சனை காலை சுத்திக்கிட்டு இருக்கு என்று சொல்ல மீனா கண்கலங்குகிறார். என்னம்மா சொல்றீங்க எனக்கு ஏதாவது நான் கூட பரவால்ல என் புருஷன் நல்லவரு அவருக்கு எதுக்கு இது மாதிரி ஆகணும் என்று சொல்ல, இதுக்கு எதுவும் பரிகாரம் இல்லையா எதுவாக இருந்தாலும் சொல்லுங்க நான் செய்றேன் என்று கேட்கிறார். இது ஒரே ஒரு விஷயம் உன் மனசு தானே நல்ல விஷயம் பண்ணு தொடர்ந்து நல்ல விஷயம் பண்ணும் போது ஒருத்தர் வந்து நீ நல்லா இருப்பமா என்று சொன்னால் உன் புருஷனுக்கு மலைபோல வர பிரச்சனை பனி போல விலகிடும் என்று சொல்லி அனுப்ப மீனா குழப்பத்தில் வருகிறார்.

மறுபக்கம் வீட்டுக்கு வந்த மீனா முத்துவிடம் நடந்த விஷயங்களை சொல்ல அவர் சிரிக்கிறார் எனக்கு என்னைக்கு பிரச்சனை இல்லாம இருந்திருக்கு என்று கிண்டல் அடிக்க மீனா எல்லா கோவிலில் இருந்தும் வாங்கிய கயிறை கட்டிவிட நான் பிரச்சனை பண்ணாம இருக்கணும்னா ஒரு விஷயம் இருக்குனு சொல்ல என்ன விஷயம் என்று மீனா கேட்கிறார் சரக்கு அடிக்கிறது தான் சரக்கடிச்சா நான் அமைதியாகிடுவேன் என்று சொல்ல நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க விளையாடிட்டு இருக்கீங்களா என்று தலையணையால் முத்துவை அடிக்க அவர் ஓடி வருகிறார் தூக்கி வீசும் போது விஜயா மீது விழ வேணும்னே பண்றியா எத்தனை நாள் என்னை அடிக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தியா என்று வழக்கம்போல் மீனாவை திட்ட அண்ணாமலை வருகிறார். உடனே அண்ணாமலை இடம் நடந்து விஷயத்தை விஜயா சொல்ல என்ன சும்மா என்று கேட்கிறார் இல்லப்பா அது தலகாணி தூக்கி போடுற விளையாட்டு விளையாடிக்கிட்டு இருந்தோம் என்று சொல்லுகிறார். ஆனால் விஜயா வம்படியாக பேசிக்கொண்டே இருக்க உடனே மீனா நான் உங்களை வேணும்னு எல்லாம் அடிக்கல தெரியாம தான் பட்டுடுச்சு வேணா நீங்க என் மேல அடிச்சுக்கோங்க என்று சொல்ல நான் அடிக்க மாட்டேன் என்று சொல்றியா எனக்கு குறி பார்த்து அடிக்க தெரியாதுன்னு நினைக்கிறியா என்று சொல்லிக் கொண்டிருக்க அண்ணாமலை வேணா விஜயா என்று சொல்ல அதையெல்லாம் கேட்காமல் தலையணையை தூக்கி வீச மீனா நகர்ந்தவுடன் மனோஜ் மீது விழுந்து விடுகிறது.

உடனே எதுக்குமா தலையணையில் அடிச்சீங்க வலிக்குது என்று மனோஜ் சொல்லுகிறார். பிறகு அண்ணாமலை அவரை சமாதானப்படுத்தி அனுப்பி விட முத்துவிடம் கையில என்ன இவ்வளவு கயிறு என்று கேட்கிறார் இல்லப்பா யாரோ கோவிலில் எனக்கு நேரம் சரியில்லன்னு சொல்லி இருக்காங்க அதனால கயிறு வாங்கி கட்டி இருக்கா என்று சொல்ல அதற்கு விஜயா இவனால தான் மத்தவங்களுக்கு நேரம் சரி இருக்காது என்று சொல்லுகிறார் அண்ணாமலை விஜயாவை கண்டிக்க உடனே விஜயா என்னைக்கு இவன் வாழ்க்கையிலே இவ வந்தாலோ அன்னைக்கே இவனுக்கு நேரம் சரியில்ல இவ வாழ்க்கைய விட்டு போய்ட்டானா அவன் நல்லா தான் இருப்பான் என்று சொல்ல உடனே விஜயா மனசுக்குள் இன்னொரு தாயத்து வாங்கிட்டு வந்து கட்டி இவள துரத்தி விடணும் என நினைக்கிறார். அண்ணாமலை என்ன விஷயம் என்று கேட்க ஒன்றும் இல்லை என சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு முத்து மீனாவை சமாதானப்படுத்துகிறார்.

மறுபக்கம் முருகன் வித்யாவை பார்க்க வர ரோகிணி இருக்கிறார் பிறகு ரோகிணி இடம் அறிமுகப்படுத்த ரோகினி இது மாதிரி ஒரு பொண்ணு உங்களுக்கு கிடைக்கிறது ரொம்ப பெரிய விஷயம் வித்யா எனக்கு ஒரு நல்ல பிரண்டு மட்டும் கிடையாது அவ என்னோட சிஸ்டர் மாதிரி என்று சொல்லுகிறார். கல்யாணத்துக்கு அப்புறம் இதே மாதிரி ஒற்றுமையா சந்தோஷமா இருங்க பொண்டாட்டி வீட்ல இருந்து பணம் வரும் நகை வரும் சொத்து வரும்னு நினைக்காதீங்க பொண்டாட்டிய பணம் தருகிற மெஷினா பாக்காதீங்க என்று எமோஷனலாக பேச முருகன் நீங்க என்ன இவ்ளோ எமோஷனல் ஆகிட்டீங்க அப்படி எல்லாம் நான் இல்லைங்க நாளைக்கா பிளாட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கப் போறோம் கண்டிப்பா நீங்க வாங்க எங்க கல்யாணத்தை நீங்கதான் முன்னாடி இன்னும் நடத்தணும் என்று சொல்ல கண்டிப்பா நான் இல்லாமையா நான் தான் முன்னாடி இருந்து நடத்துவேன் என ரோகினி சொல்ல சரி என்று முருகன் கிளம்பி விடுகிறார்.

ரோகிணி வித்யாவிடம் நல்லவரா தான் இருக்காரு என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் உங்க அம்மா வரேன்னு சொன்னாங்கன்னு சொன்னா என்ன விஷயம் என்று கேட்க தெரியல போன்லயே சொல்ல சொன்னா நேரில் வரேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ரோகிணியின் அம்மா வந்து விடுகிறார்.ரோகிணி அம்மா என்ன சொல்லுகிறார்?அதற்கு ரோகினியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 07-05-25
SiragadikkaAasai Serial Episode Update 07-05-25