தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினி இடம் சிட்டி கிட்ட கடன் வாங்கின என்று கேட்க உனக்கு யார் சொன்னது என்று கேட்கிறார் முத்து தான் சொன்னா என்று சொல்ல,சிட்டி ரவுடி என்று நீ பார்த்தியா இந்த வீட்ல சண்டை போட்டுக்கிட்டு இருக்க உன் தம்பி முத்து தான் ரவுடி ஆமா நான் கடன் வாங்கின நீ வேலைக்கு போறதுக்கு முன்னாடி நம்மளோட பர்சனல் செலவு இருந்தது வீட்டுக்கு கொடுக்க வேண்டியது இருந்தது அதனால தான் வாங்கினேன் அந்த கடனை நான் அடச்சிட்டு தான் இருக்கேன் என்று சொல்ல, எவ்வளவு கடன் வாங்கி இருக்க என்று எனக்கு எழுதிக் கொடு என்று கேட்கிறார் எழுதி கொடுத்தால் உடனே கொடுத்துடுவியா என்று ரோகினி கேட்க மனோஜ் அமைதியாகி விடுகிறார்.
மறுபக்கம் முத்துவிற்கு மீனா பால் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க பார்லரமாட்ட விஷயத்தை சொன்னியா என்று கேட்க, சொன்னேன் சிட்டி கிட்ட கடன் வாங்கினத கேட்கும் அதை விட அந்த வீடியோ வெளியிட்டதோ சிட்டி தானே சொல்லும் போது தான் அவங்க முகம் மாறி வியர்க்க ஆரம்பித்தது. அவங்களும் ஏதேதோ சொல்லி சமாளிச்சுட்டு போயிட்டாங்க என்று சொல்ல, இந்த சிட்டி விஷயத்துல ஏதோ ஒரு மர்மம் இருந்துகிட்டே இருக்கு அதை எப்படியாவது கண்டுபிடிக்கணும் என்று முத்து சொல்லுகிறார். பிறகு மீனா மாமா அந்த காசை கண்டுபிடிக்கிற பொறுப்பு உங்ககிட்ட ஒப்படைச்சுருக்காங்க நீங்க அதை சரியா பண்ணனும் என்று சொல்ல ஆமா மீனா நாளைக்கு நம்ம இந்த நடிகர் வீட்டுக்கு போயிட்டு வந்துரலாம் என்று சொல்லுகிறார். காலைல கொஞ்சம் பூ கொடுக்குற வேலை இருக்குங்க சீக்கிரமா முடிச்சுட்டு போயிட்டு வரலாம் என்று சொல்ல முத்துவும் சரி என சொல்லுகிறார்.
முத்து மீனாவும் நடிகர் வீட்டுக்கு வந்து பூ கொடுக்க அவர் பூவை வாங்கிக் கொண்டு காசு எவ்வளவு ஆச்சு என்று கேட்கிறார் நான் வாரத்துக்கு ஒருவாட்டி இல்லன்னா மாசத்துக்கு ஒரு வாட்டி வாங்கிக்கிறேன் சார் என்று சொல்லுகிறார் இவர் யாரும் என்று கேட்க என்னோட ஹஸ்பன்ட் சேர்ந்து சொன்ன உடனே முத்து நான் உங்களோட பெரிய ஃபேன் என்று சொல்லுகிறார். சரி வாங்க உட்கார்ந்து பேசலாம் என்று சொல்லி உட்கார வைக்கிறார். நீங்க நடிக்கிற படம் சீரியல் எல்லாமே நான் பார்த்திடுவேன் அன்னைக்கு ஒரு நாள் உங்களை ஈசிஆர் ல இருக்க ஒரு இடத்துல பார்த்தேன் என்று சொல்ல ஓ பீச் ஹவுஸ் என்று சொல்றீங்களா என்று கேட்கிறார் ஆமா சார் என்று சொன்ன அதற்கு அவர் அங்க கதிர் என்கிற ஒரு ஆளு படம் எடுக்க போறதா சொன்னாரு சரி வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று பார்த்தால் சரியான பிராடா இருப்பான் போல அந்த வீட்டை வேற விக்கணும் யாராவது ஆள் தெரிஞ்சா சொல்லுங்கன்னு சொல்லி இருந்தாரு பாவம் யார் வாங்கிய ஏமாந்தாங்களோ தெரியல என்று சொல்ல வேற யாரும் இல்ல சார் அது நாங்கதான் என்று சொல்லுகிறார். என் அண்ணன் தான் காசு கம்மியா வருதுன்னு ஏமாந்துட்டா என்று சொல்லுகிறார். அவன பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க சார் என்று சொல்ல சரி கண்டிப்பா சொல்றேன் என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து டெக்கரேஷன் செய்யும் பெண்மணி வருகிறார். அவரிடம் நீங்க மண்டபத்தில் உள்ள இருக்குற டெக்கரேஷன் ஃபுல்லா பார்த்துக்கோங்க இவங்க வெளியவும் கார் கொடுக்கலாம்னு இருக்கேன் கார் டெக்கரேஷன் வீட்டில் சிம்ப்புல டெக்கரேஷனும் இவங்க பாத்துக்கிட்டோம் என்று சொல்ல சிந்தாமணி டென்ஷன் ஆகிறார்.அதெல்லாம் எப்படி சார் கொடுக்க முடியும் நான் பண்ணா எல்லாம் நானே தான் பண்ணுவேன் என்று சொல்ல உங்களுக்கு விருப்பம் இருந்தா பண்ணுங்க இல்லனா விடுங்க என்று சொல்ல அப்படி எல்லாம் இல்ல சார் நான் பண்ணுவேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மீனாவும் ஆர்டர் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார் என்று சந்தோஷப்பட்டு வெளியே வருகின்றனர்.
அவர்களை நிற்க வைத்து சிந்தாமணி பேசுகிறார் என்ன முகத்துல அவ்வளவு சந்தோசம் என்று கேட்கிறார். எனக்கு தொழில் இல்லை எந்த போட்டியும் இல்லன்னு நினைச்சா ஆனா இப்போ நீங்க இருக்கீங்க என்று சொல்ல, நாங்க ஒன்னும் உங்களுடைய ஆர்டரை புடுங்கல உங்களுக்கு வர்றது நீங்க செய்ங்க எங்களுக்கு வர்றது நாங்க செய்றோம் என்று சொல்ல நீங்க எப்படி முன்னேறீங்கன்னு பாக்குறேன் என்று சொல்லுகிறார். நல்லா பெருசா ஆலமரம் மாதிரி வெயிட்டா முன்னேறுவோம் என்று முத்து சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
வீட்டில் விஜயா பசி அதிகமா இருக்கு இந்த மீனா வேற எங்க போனாலும் தெரியல இஷ்டத்துக்கு சுத்தி வர என்றெல்லாம் திட்டிக் கொண்டிருக்க மனோஜ் ரோகினி வருகின்றனர். அண்ணாமலை எதுக்கு இப்ப கத்திக்கிட்டு இருக்க என்று சொல்ல எனக்கு ரொம்ப பசிக்குது இந்த மீனா வேற எதுவுமே சமைச்சு வைக்காம போயிட்டா என்று சொல்ல ரோகிணி நான் வேண்டும் என்றால் சமைக்கட்டுமா என்று கேட்கிறார் உடனே மனோஜ் மற்றும் விஜயா இருவரும் வேண்டாம் என ஒரே நேரத்தில் சொல்ல அண்ணாமலை ஏன் வேண்டாம் என்று சொல்றீங்க நீங்க ரோகினோட சாப்பாடு சாப்பிட்டதில்லை அதனால் தான் இப்படி சொல்றீங்க என்று விஜயா சொல்லுகிறார்.
உடனே முத்துவும் மீனாவும் வர விஜயா என்ன கேட்கிறார்? அதற்கு மீராவின் பதில் என்ன? முத்து என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.