தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் நீ சொல்லாமலே உங்க அம்மா வந்து சீதாவை பத்தி பேசினாங்க என்று கேட்க நான் எதுக்கு சொல்லணும் நான் எதுவுமே சொல்லல என்று சொல்ல பொய் சொல்லாத மீனா என்று முத்து கோபப்பட உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லனா விடுங்க என்று சொல்லிவிட்டு மீனா பூ கட்ட போக உடனே முத்து நான் சொல்றேன் என சொல்லுகிறார். சீதா அருணை கல்யாணம் பண்ணிப்பேன் அப்படி இல்லன்னா கல்யாணமே வேணான்னு சொல்ற என்று சொல்ல மீனா அவ லவ் பண்ணி இருக்கா என்ன பண்ண முடியும் எங்க அப்பாவா இருந்தா அவ விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு என்று சொல்ல என் மாமா இருந்தாலும் அவனோட குணத்தை விசாரிச்சிட்டு தான் கொடுத்திருப்பார்.
அவன் நல்லவன் கிடையாது என்று முத்து மீண்டும் சொன்னதையே சொல்ல வேணும்னா ஆவி கிட்ட எல்லாம் பேசுறவங்க கிட்ட போய் ஒரு வாட்டி பேசி பார்க்கலாம் என்று சொல்ல மீனாவும் தெரிஞ்சா அக்கா போய் இருக்காங்க அவங்க கிட்ட விசாரிச்சு பார்க்கிறேன் என சொல்லுகிறார். மறுபக்கம் விஜயா டான்ஸ் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.அருண் அம்மா விஜயாவை பார்க்க பார்வதி வீட்டுக்கு வருகிறார்.
பார்வதியும் அவரை அழைத்து உட்கார வைக்க அருண் அம்மா விஜயாவிடம் சீதா விஷயம் பற்றி பேசுகிறார்.என் பையனும் சீதாவும் காதலிக்கிறார்கள் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறாங்க ஆனா உங்க பையன் அவங்களுக்குள்ள நடந்த விஷயத்தை வைத்து கல்யாணத்தை நடத்த விட மாட்டேங்குறாரு நீங்க தான் கொஞ்சம் பேசணும் என்று சொல்ல ஏன் உங்களுக்கு வேற வீடு கிடைக்கலையா இந்த பூக்கற்ற குடும்பம் தான் கிடைத்ததா, உங்க பையனுக்கு உடம்புல ஏதாவது பிரச்சனையா இரண்டாவது கல்யாணமா என்றெல்லாம் கேட்க அருண் அம்மா கோபப்பட்டு உங்க பையனும் சமாதானப்படுத்தி கல்யாணத்துக்கு போறதுக்கு ஏண்டா பேசணும் இல்லனா இங்க வந்து இருக்க மாட்டேன் என்று சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் சாமியார் ஒருவர் வீட்டு வாசலில் வந்து நிற்க முத்து மீனா தான் ஆவியுடன் பேச ஆள ரெடி பண்ணியதாக நினைத்து அவரை கூப்பிட்டு வர வைக்க ரவி அண்ணாமலை என எல்லோரும் வர அவர்களிடம் யாரும் கேட்கும் போது ஆவி கூட பேசுவதை என்று சொல்ல வந்து சாமியாரை பேச விடாமல் செய்கிறார் முத்து அவர்கள் மீனாவ கூட்டிட்டு வரேன் என்று சொல்லி, மீனாவையும் பேச விடாமல் நீங்க முதல்ல ஆவியை வர சொல்லுங்க நான் பஸ்ட் பேசுறேன் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து வந்த சாமியார் நான் கிளம்புறேன் நீங்க பேசுறத பாத்தா எனக்கே பயமா இருக்கு என்று கதவு வரை ஓட முத்து இழுத்து பிடித்து நிற்க வைக்கிறார்.
இப்போ பேய் வர சொல்றீங்களா இல்லையா என்று சொல்லு அந்த நேரம் பார்த்து கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. பிறகு அனைவரும் பயப்பட என்ன நடக்கிறது? விஜயாவின் ரியாக்ஷன் என்ன குடும்பத்தினர் என்ன செய்கின்றனர்? சாமியார் என்ன செய்கிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 10-06-25